பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 3

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,513
113
Germany
“கொலை எதுவும் பண்ணிட்டியா?” என்று வாசுதேவ் கேட்க, “
கொலையை விட பெரிய தப்பு பண்ணிட்டேன் “என்று கூறினான்
நந்தன்.

“கொலைய விட பெரிய தப்பா? நீ என்ன சொல்றேன்னு புரியல?” என்று
வாசுதேவ் கேட்க, “ நம்ம ஒரு கொலை பண்ணுனால் அவங்களுக்கு
ஒரு செகண்ட் தான் வலிக்கும். அதுக்குள்ள அவங்களோட உயிர்
போயிரும்! ஆனா நான் பண்ணுன தப்பு அந்த உயிரோட
உணர்ச்சிகளை மொத்தமா கொன்னு அவங்க வாழ்நாள் முழுவதும்
அத நெனச்சு வேதனை படுற அளவுக்கு பெரிய தப்பு பண்ணி
இருக்கேன்! வேண்டாம் என்னை விட்டுடுங்கன்னு அவங்க என்ன
பாத்து கெஞ்சினப்ப கூட மனிதாபிமானம் இல்லாம நடந்துட்டேன்!
இப்ப அத நெனச்சாலும் என்னோட மனசாட்சி என்னைய காரி துப்புது,
பாதிக்கப்பட்டவங்க பக்கத்துல இருந்து என் மேல எந்த
கம்ப்ளைன்ட்டும் கொடுக்கல, கேச உடைச்சு ஈஸியா வெளியில
உங்கள கொண்டு வந்துடலாம்னு வக்கீல் சொன்னாரு! ஆனா நான்
ஒத்துக்கவே இல்ல, இந்த தண்டனைய நான் பண்ணுன தப்புக்கு
கூலியா நான் ஏத்துக்கிட்டு இருக்கேன்! எட்டு வருஷமா
ஜெயிலுக்குள்ள இருந்துட்டேன் இன்னும் ஒரு மாசம் தான் நான்
விடுதலையாக! ஆனா எனக்கு வெளியில போறதுக்கு விருப்பமே
இல்ல காலத்துக்கும் இந்த ஜெயில்லையே ஆயுள் கைதியா இருந்து
செத்துடலாம்னு தோணுது!” என்று கண் கலங்கினான் நந்தன்.

“நீ என்ன சொல்றன்னு எனக்கு சரியா தெரியல ஆனா உன்னுடைய
வருத்தம் மட்டும் எனக்கு புரியுது! இங்கே இருக்கிற எல்லாரும் தப்பு
பண்ணணும்னு திட்டம் போட்டு பண்ணினவங்க கிடையாது

உணர்ச்சியோட வேகத்துல கோபத்துல ஆத்திரத்துல அவங்களையே
அறியாம ஏதோ ஒரு தப்பு பண்ணிட்டு உள்ள வந்திருக்காங்க, அந்த
மாதிரி தான் நீயும் ஏதாவது பண்ணியிருப்பேன்னு நினைக்கிறேன்! நீ
பண்ணுன தப்ப என்னைக்கு மனசார தப்புன்னு ஒத்துக்கிட்டு அதுக்கான
தண்டனையை அனுபவிக்கணும்னு நினைச்சியோ அன்னைக்கே நீ
திருந்திட்ட, அதனால இன்னைக்கு போலீஸ்காரங்க உன்னோட நல்ல
நடத்தைக்கு காரணமா கொடுக்கிற இந்த விடுதலையை ஏத்திட்டு
வெளில போயி நல்லபடியா வாழ ஆரம்பி” என்று கூறினார்
வாசுதேவ்.

நல்ல நடத்தைனு எங்கிட்ட ஒன்னு இருந்திருந்தால் நான் இந்த இடத்துக்கு வந்து இருக்க
மாட்டேன், நீங்க சொன்னது உண்மைதான் நான் இப்ப தண்டனை
அனுபவிக்கிறதுக்கான குற்றத்தை வேணும்னே பண்ணல கோபத்துல ஆத்திரத்துல
என்னையே அறியாம பண்ணிட்டேன். அதுக்காக நான் பண்ணுன தப்பு இல்லைன்னு
ஆயிடாதில்ல, என்னால பாதிக்க பட்டவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க
இப்பயும் எவ்ளோ கஷ்டப்படுவாங்க!” என்று சொல்லியவன் நினைவில் கண்கள் கலங்கி
கதறி அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணின் முகம் வந்து போனது.

அவள் முகம் வந்து போனதும் நந்தனின் உதட்டில் இருந்து “என்னைய மன்னிச்சிருங்க”
என்ற வார்த்தையும் அவன் கண்களில் இருந்து கண்ணீரும் வெளியேறியது.

வாசுதேவ் நந்தனை பார்க்க அவன் கண்களை துடைத்துக்கொண்டு, என்னால
பாதிக்கப்பட்டவங்க பட்ட கஷ்டத்துக்கு முன்னாடி நான் படுற இந்த கஷ்டம் ஒன்னும்
எனக்கு பெருசு இல்ல, கண்டிப்பா என்னோட தண்டனை காலம் முடியும் போது மட்டும்
தான் இந்த இடத்துல இருந்து நான் வெளியில போவேன்! அதுக்கு இடையில யார் என்ன
சொன்னாலும் எனக்கு விடுதலை வேண்டாம் என்று கூறிக்கொண்டே பேசிக்
கொண்டிருந்த காவலர்களை நோக்கி தன்னுடைய முடிவை சொல்வதற்காக சென்றான்
நந்தன்.

சக கைதியான வாசுதேவோ, இப்படி சொல்லிவிட்டு போகும் நந்தனை விசித்திரமாக
பார்த்துக் கொண்டிருந்தார்.

காவலர்களின் அருகே சென்றவன், “ சார், நன்னடத்த காரணமா வெளியில
அனுப்புறதுக்கு என் பேர ரெக்கமண்ட் பண்ணுனீங்கன்னு கேள்விப்பட்டேன். நன்னடத்த
காரணமா என்னைய நீங்க வெளியில அனுப்புறதுக்கு தகுதியான ஆள் நான் கிடையாது,
எனக்கு வெளியில போறதுக்கு விருப்பம் இல்ல, எனக்கு பதிலா வேற யாரையாவது
அனுப்புங்க! ப்ளீஸ் சார் என்று நந்தன் கூறினான்.

அங்கிருந்த காவலர்கள் நால்வரும் நந்தனை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

இங்கு பிரகாஷ் கண்ணாவின் ஆபீஸில்,

பிரகாஷ் கண்ணாவும், மாய மித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிரகாஷ் கண்ணாவின் விழிகள் ஆயிரம் கேள்விகளை மாயமித்ராவிடம் கேட்டுக்
கொண்டிருக்க அவளோ உங்களின் எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை
என்பதை போல் அலட்சியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரின் மௌனத்தையும் கலைக்கும் விதமாக உள்ளே நுழைந்தாள் ரஞ்சனா.
“என்னாச்சு, அமைதியா ரெண்டு பேரும் இருக்கிறீங்க?” என்று ரஞ்சனா கேட்க,

“ உன்னோட பிரண்டு என்னைக்கு பேசியிருக்காங்க, எப்ப எது கேட்டாலும் அமைதி
மட்டும் தான், கேட்கிற கேள்விகள் புரிஞ்சா கூட பதில் சொல்ல வேண்டாம்னு

வலுக்கட்டாயமா இருக்கிறவங்க இருக்கிற இடத்துல அமைதி மட்டும்தான் இருக்கும்!”
என்று மாயமித்ராவை பார்த்துக் கொண்டே ரஞ்சனாவிடம் கூறினான் பிரகாஷ்.

“ஏற்கனவே பதில் சொல்லி முடித்த கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்!” என்று
மாயமித்ராவும் ரஞ்சனாவிடம் கூறுவதைப் போல் பிரகாஷ் கண்ணாவிடம் கூறினாள்.

“எழுதின விடை தப்பா இருந்தால் திருத்தி எழுத தானே செய்யணும்! நான் ஏற்கனவே
விடை எழுதிட்டேன். தப்போ ரைட்டோ அதுதான் விடை. அந்த விடைய
எக்காரணத்தைக் கொண்டும் மாத்த மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறது எந்த வகையில
நியாயம்? “ என்று சூசகமாக கேள்வி கேட்டான் பிரகாஷ் கண்ணா.

“தப்போ ரைட்டோ, அது நான் எழுதினது. அடுத்தவர்களுக்காக அவங்களுக்கு புடிச்ச
மாதிரி விடைய என்னால எழுதி வைக்க முடியாது, ஒருவேளை நான் அப்படி அவங்க
சொன்னதுக்காக எழுதினா அது என்னோட விடையா இருக்காது!” என்று மாயமித்ராவும்
அழுத்தம் திருத்தமாக பிரகாஷ் கண்ணாவின் பார்த்து கூறினாள்.

இவர்கள் இருவரையும் பேச விட்டால் இன்னும் விவாதம் அதிக நேரம் நீடிக்கும் என்று
எண்ணிய ரஞ்சனா,

“மித்ரா நீ கட்டி இருக்கிற புடவை ரொம்ப அழகா இருக்கு, நீ ஆபீஸ்க்குள்ள
வரும்போதே சொல்லலாம்னு பார்த்தேன் , ஏதோ ஞாபகத்துல மறந்துட்டேன்!” என்று
ரஞ்சனா கூற,

“ஆமா, ரொம்ப அழகா தான் இருந்துச்சு. அதோட கலர் பார்டர் எல்லாம். அதுவும் சிங்கிள்
ப்ளீட்டில் விட்டது சேலையை இன்னும் அழகா காட்டுச்சு. அதுவும் உன் பிரண்டு
கட்டினதால சேலை இன்னும் அழகா இருந்துச்சு!”என்று சிலாகித்துக் கூறினான் பிரகாஷ்
கண்ணா.

பிரகாஷ் கண்ணா கூறியதை கேட்கவும் மாயமித்ரா எதுவும் சொல்லாமல் அமைதியாக
இருக்க ரஞ்சனாவிற்கு சிரிப்பு வந்து விட்டது.

ரஞ்சனாவை பார்த்து மாயமித்ரா முறைக்க,” இல்ல சார் கட்டுமான பணிகளை கூட
இவ்வளவு நுண்ணிப்பா கவனிச்சிருக்க மாட்டாரு, நீ கட்டுன சேலையை இவ்வளவு
டீப்பா கவனிச்சிருக்காருனு நெனச்சேன் சிரிப்பு வந்துட்டு!” என்று இழித்தாள் ரஞ்சனா.

பிரகாஷ் கண்ணாவோ சிரித்துக்கொண்டு, கட்டுமான பணியை விட நம்ம கட்டிக்க
போறவங்கள ரசிக்கிறதுல ஒன்னும் தப்பு இல்லையே! “ என்று பிரகாஷ் கண்ணா கூற, “
சார் நீங்க டாக்குமெண்ட்ல சைன் பண்ணுங்க, கொட்டேஷன் அனுப்பனும்!” என்று
பேச்சை மாற்றினாள் மாயமித்ரா.

“எப்பவுமே ஏதாவது சொல்லி என்கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு
நினைக்காதீங்க! ஒரு நாள் இல்ல ஒரு நாள் என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் நீங்க
பதில் சொல்லியே ஆகணும், சொல்லுவீங்க சொல்ல வைப்பேன்!” என்று பிரகாஷ்
கண்ணாவும் அழுத்தம் திருத்தமாக கூறினான்.

பிரகாஷ் கண்ணா எதை பற்றி பேசுகிறான் என்று புரிந்தாலும் மாயமித்ரா எதுவும்
புரியாதது போல் எனக்கு என்னவென்று அங்கிருந்த சுவற்றை வெறிக்க பார்த்தாள்.

அவளின் பார்வை போன திசையை கண்டு இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம் என்று
நினைத்து வாய மித்ரா கொடுத்த டாக்குமெண்டில் கையப்பமிட்டு, மாய மித்ராவின்
கைகளில் கொடுத்தான். அவன் கொடுத்த அடுத்த நொடியே எதுவும் சொல்லாமல்
அங்கிருந்து விறுவிறுவென்று வெளியேறிவிட்டாள் மித்ரா.

மித்ரா செல்லவும் பிரகாஷ் கண்ணாவின் முகம் வாடியது. “இப்ப எதுக்கு இப்படி மூஞ்சிய
தொங்க போடுற? நீ என்ன பேசினாலும் அவ இப்படித்தான் நடந்து கொள்வான்னு
உனக்கு தெரியாதா? விட்டு தள்ளு, உன்னைய வேண்டாம்னு ஒதுங்கி போறவளே நீ
விட்டுற வேண்டியதுதானே! ஏன் அவ பின்னாடி போயி நீயே உன்ன கஷ்டப்
படுத்துகிற? “ என்று ரஞ்சனா கேட்க,

“என்னைய வேண்டாம்னு அவ நினைக்கிறான்னு உனக்கு யாரு சொன்னா! நான்
அவளை விரும்புவதை காட்டிலும் அவ என்னைய அளவுக்கு அதிகமா காதலிக்கிறா? அத
அவ வெளியில சொல்லல அவ்வளவுதான்!” என்று பிரகாஷ் கண்ணா கூற அதிர்ந்து
போனாள் ரஞ்சனா.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
நந்தன் மனதில் தோன்றிய முகம்....மித்ரா ஓடாதா??????
பிரகாஷ் சொல்ல காரணம்???