பனி இரவும் கனல் மழையும்
மழை - 1
அந்த சிறிய வீட்டின் கூடத்தில் தன் பாட்டியுடன் படுத்திருந்தவளின் சீரான மூச்சுக்காற்றே அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை பறைசாற்றியது.
இரண்டு பேர் படுக்கும் பாயை விரித்து தான் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
தலைமாட்டில் தண்ணீர் சொம்புடன் கூடிய குவளை வீற்றிருந்தது.
அவளுக்கு வலது புறம் புத்தகமும், ஒரு நோட்டும், பென்சில் பேனாக்கள் அடங்கிய பவுச்சும் வீற்றிருந்தது.
தூரத்தில் எங்கோ பக்தி பாடல் ஒலிக்கும் ஓசை அவளின் செவியை தீண்டவும், மெல்லிய சிணுங்களோடு அவளின் மூடிய விழிகளுக்குள் கருமணிகள் அங்கும் இங்கும் மெல்ல அசைய துவங்கியது.
கொஞ்சம் கொஞ்சமாக உறக்கம் கலைய எழுந்தமர்ந்தாள். இவளின் சிறு அசைவுக்கே அவளின் அருகில் படுத்திருந்த அவளின் பாட்டி விழித்துக் கொண்டார், "என்னாச்சு கண்ணு?".
அவள் மெதுவாக அவரின் கவனத்தை கலைக்காதவாறு எழுந்தும் கூட, அவர் உறக்கம் கலைந்து விட்ட அதிருப்தி அவளின் முகத்தில் அப்பட்டமாக தெரிய.
"என்ன பாட்டி நீ, இப்போ எதுக்கு எழுந்த?".
"நீ எழுந்ததும் என்னமோ ஏதோனு எனக்கும் விழிப்பு தட்டிடுச்சு கண்ணு" என்றார் முழுதாக உறக்கம் கலைந்த குரலில்.
"உடம்பு முடியாம நேத்து தான் டாக்டர் கிட்ட போயிட்டு வந்து மாத்திரை எல்லாம் போட்டுட்டு படுத்திருக்க. அதுக்குள்ள இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்திரிக்கணுமா.. நீ கொஞ்ச நேரம் படுத்து தூங்கு. நான் வாசல தெளிச்சு கோலம் போட்டுடுறேன்" என்று கூறிக்கொண்டே எழுந்தவள். தன் போர்வையை மடித்து வைத்துவிட்டு பல் துலக்க சென்றாள்.
"அதெல்லாம் ஒன்னும் வேணாம் கண்ணு" என்று பாட்டி கூறியதை எல்லாம் அவள் எங்கே காதில் வாங்கினாள்.
அவள் செந்நிலா..
ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், அவளின் வார்த்தையிலும், செயலிலும் வயதிற்கும் மீறிய முதிர்ச்சி வெளிப்படையாகவே பிரதிபலிக்கும்.
சிறு வயது முதல் அவள் கடந்து வரும் பாதை அப்படி..
தாய் தந்தையை இழந்து, பாட்டியின் உதவியோடு தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். விவரம் அறியாத வயதிலேயே வயதிற்கும் மீறிய பக்குவம் அவளுக்கு தானாகவே வந்துவிட்டது.
ஒருபுறம் தாய் தந்தையின் இழப்பு அவளை பக்குவப்படுத்தியது என்றால், மற்றொரு புறம் சுற்றி இருப்பவர்களின் செயல் அவளை மிகவும் பக்குவப்படுத்தி விட்டது.
மார்கழி மாத குளிர் சில்லென்று உடலை சிலர்க்கச் செய்தது. தூரத்தில் ஒலிக்கும் பக்தி பாடல்களின் கீர்த்தனையை கேட்டவளின் இதழ்களும் மெல்லமாய் அதனோடு சேர்ந்து முணுமுணுக்க. கைகள் அதன் போக்கில் கோலத்தை இட்டுக் கொண்டிருந்தது.
வெளி வேலையை முடித்துக் கொண்டு இவள் வீட்டிற்குள் நுழையவும், சமையலறையில் இருந்து வெளியே வந்த அவளின் பாட்டி செங்கேணி அவளுக்கான காபியை அவளின் முன்பு நீட்டி இருந்தார்.
"என்ன பாட்டி நீ ஒரு தடவ சொன்னா கேக்க மாட்டியா? உடம்பு முடியலன்னா ரெஸ்ட் எடுக்குறதுல ஒன்னும் தப்பு கிடையாது. இப்போ யாரு உன்ன இதெல்லாம் செய்ய சொன்னா, ஏன் நான் செய்ய மாட்டேனா?".
"சும்மா இரு கண்ணு, பள்ளிக்கூடம் போற புள்ள.. நீ இதையெல்லாம் பார்த்தா சரி வருமா.. உனக்கு படிக்கிற சோலி நிறைய கெடக்கும். நீ போய் அத பாரு, இதையெல்லாம் நான் பார்த்துக்கிடுறேன். இதைவிட இந்த கிழவிக்கு வேற என்ன சோலி கிடக்கு".
பாட்டிக்கும் வயது முதிர்ச்சி அதிகமாகிக் கொண்டே போவதால் அதிகமாக அவரை செந்நிலா வேலை செய்ய விடமாட்டாள்.
முடிந்த மட்டும் தன்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை அவருக்கு செய்து விடுவாள். இப்படி வாசலை தெளித்து கோலமிடுவது, வீடு கூட்டுவது, காய்கறிகள் நறுக்கிக் கொடுப்பது, பாத்திரம் துலக்குவது என சிறு சிறு வேலைகளை எல்லாம் தன்னால் முடிந்த மட்டும் அவருக்கு செய்து கொடுப்பாள்.
அதன் பிறகு, பாட்டி சமையல் வேலையை கவனிக்க.
செந்நிலா தன் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க அமர்ந்து விட்டாள்.
இன்று அவளுக்கு கணித பாடத்திற்கான அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.
படித்து முடித்து அவள் பள்ளிக்கு செல்ல சீருடையில் தயாராகி வரவும். பாட்டி அவளுக்கான காலை உணவைக் கொண்டு வந்து அவளிடம் நீட்டி இருந்தார்.
அவள் படிப்பது அவர்களின் ஊரிலேயே அமைந்திருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்பதால் மதிய உணவை அங்கேயே சத்துணவில் உண்டு கொள்வாள்.
பாட்டியும் காலை உணவை உண்பதோடு சரி, மதியம் மீதமிருக்கும் கஞ்சி என்று எதையாவது உண்டு கொள்வார். தனக்கு என்று மெனக்கெட்டு எதுவும் செய்து கொள்ள மாட்டார்.
அதற்கு அவர்களின் குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணம் என்றும் கூறலாம்.
அவளின் தாய் தந்தையின் இறப்பிற்கு பிறகு, கையில் இருந்த சேமிப்பை வைத்து தான் பாட்டி செந்நிலாவை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
பெரிதாக வசதி வாய்ப்பெல்லாம் கிடையாது. தினமும் கூலி வேலைக்கு சென்று தான் இவளை வளர்க்கிறார்.
குடும்ப சூழலை உணர்ந்த செந்நிலாவும் தன்னால் முடிந்த மட்டும் பாட்டிக்கு செலவு வைக்காமல் சிக்கனமாக தான் செயல்படுவாள்.
அரசு பள்ளியிலேயே படித்துக் கொண்டு, அங்கே கிடைக்கும் சத்துணவை உண்டு கொண்டு தான் தன் படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.
அவளின் ஆசை எல்லாம் நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்று தன் பாட்டியை நல்லபடியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான்.
அவளுக்கு அனைத்துமாய் இருப்பது அவர் மட்டும் தானே..
அவர் கொடுத்த உணவை உண்டு விட்டு கிளம்புகையிலேயே அவளின் அடி வயிற்றில் சுருக்கென்ற வலி. ஒரு நொடி தடுமாறி தன் வயிற்றைப் பிடித்தாள் செந்நிலா.
"என்னாச்சு கண்ணு, ஏதாவது பண்ணுதா? வயிறு வலிக்குதா சாமி? இன்னைக்கு வேணும்னா பள்ளிக்கூடத்துக்கு விடுப்பு போட்டுடு" என்று நொடியில் படபடத்தார் பாட்டி.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி. இப்ப கொஞ்ச நாளா இப்படித்தான் அப்பப்போ வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு. வேற ஒன்னும் இல்ல, நான் கிளம்புறேன்" என்று அவரிடம் விடை பெற்று தங்கள் பள்ளியை நோக்கி நடக்க துவங்கினாள்.
அவள் சென்றதும் நேராக தன் மகள் மற்றும் மருமகனின் புகைப்படத்திற்கு முன்னே சென்று நின்ற பாட்டி, "உம்மக பெரிய மனுசியாகப்போறான்னு நினைக்கேன். அதான் அப்பப்போ வயிறு வலிக்குதுன்னு சொல்லுதா.. இந்த மாதிரி நேரத்துல அவளோட நீ இல்லாம போயிட்டியே தாயி. இந்த கிழவிக்கும் இன்னும் எத்தன நாள் ஆயிசுனு தெரியல. நான் இருக்க வரைக்கும் உம்புள்ளய பத்திரமா பாத்துக்கிடுவேன். ஆனா, எனக்கு பொறவு.. நெனச்சாலே பயமா இருக்கு. அவள நல்லபடியா வளர்த்து ஒரு நல்ல இடத்துல கண்ணாலம் கட்டி கொடுத்துட்டா போதும். பொறவு நான் நிம்மதியா கண்ண மூடிடுவேன்" என்றவருக்கு கண்களில் இருந்து கண்ணீர் கீழிறங்கி விட்டது.
தன் முந்தானையால் அதனை துடைத்துக் கொண்டவர். தானும் மீதம் இருக்கும் பழைய சாதத்தை உண்டு விட்டு வேலைக்கு கிளம்பினார்.
*****
"அடியேய் யமுனா! அண்ணங்காரன் எவ்வளவு நேரமா உமக்காக காத்துட்டு இருக்கான். இன்னும் என்னத்த மகாராணி கிளம்புறீங்க" கணீரென்ற காமாட்சி பாட்டியின் குரல் அந்த வீட்டையே அலற விட்டுக் கொண்டிருந்தது.
"சீக்கிரம் டி, பாட்டி திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. இந்தா இதை புடி" என்று அவசரமாக அவளின் உணவு டப்பாவை பைக்குள் திணித்தவர். மகளை இழுத்துக் கொண்டு சமையலறையில் இருந்து வேக வேகமாக வாசலை நோக்கி நடந்தார்.
"ஒன்னு சின்னது ஒழுங்கா இருக்கணும். இல்ல, பெருசு ஒழுங்கா இருக்கணும். புத்தி சொல்ல வேண்டிய பெருசே இப்படி இருந்தா, சின்னத குத்தம் சொல்லி என்ன பண்ண" என்று தன் வாயில் போட்டிருந்த வெற்றிலை பாக்கை கோதப்பிக்கொண்டே அவர் கூறியது வள்ளியின் செவிகளில் விழுந்ததும் அவரின் நடையில் வேகம் தான் கூடியது.
வாசலில் தன் இரு சக்கர வண்டியில் தயாராக காத்திருந்தான் பொற்செல்வன். பக்கத்து ஊரில் அமைந்திருக்கும் கல்லூரியில் தான் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.
தன் மகளை மகனுடன் வண்டியில் அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார் வள்ளி.
"இதெல்லாம் எங்க அடுக்கும்.. வீட்டு பொம்பளைங்க காலையில வெள்ளனையே எழுந்திருச்சு, வீட்டு வேலை எல்லாம் பார்த்தா எல்லா வேலையும் நேரத்துக்கு முடியும். இங்க தான் ஆடி அசஞ்சு எழும்பவே நேரம் ஆகிடுது. அப்புறம் எங்கிருந்து வேலை எல்லாம் நேரத்துக்கு முடிய" என்று தன் போக்கிற்கு குறை கூறிக்கொண்டே கால்கள் இரண்டையும் நீட்டிய வாக்கில் ஒன்றின் மேல் ஒன்றை போட்டவாறு நேராக வாசல் தெரியும் படி தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார் காமாட்சி பாட்டி.
அனுதினமும் தன் மாமியாரிடம் வாங்கும் அர்ச்சனை தான் இவை என்பதால், காலப்போக்கில் வள்ளிக்கு அதுவே பழகியும் போய்விட்டிருந்தது.
"புக்கெல்லாம் கரெக்டா எடுத்து வச்சுட்டியா யமுனா?" என்ற தன் அண்ணனுக்கு, "ம்ம், அதெல்லாம் எடுத்து வச்சிட்டேன்ண்ணா".
செந்நிலாவின் வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். பாதியை கடந்துவிட்டவளுக்கு சட்டென்று அடிவயிற்றில் இருந்து பந்து போல் வலி கிளம்பியது.
சுள்ளென்ற வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அப்படியே தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்று விட்டாள்.
சரியாகிவிடும் என்று எதிர்பார்த்தவளிற்கு ஏமாற்றம் தான் கிட்டியது. போகப்போக வலி அதிகரித்ததே தவிர, நின்ற பாடில்லை.
அவளுக்குள் ஏதேதோ மாற்றங்கள் அவளால் உணரக்கூடியதாய் இருந்தது. அவளுக்குள் தோன்றும் மாற்றங்களுக்கான காரணமும் அவளுக்கு நன்கு புரிந்திருந்தது. ஆனால், இப்பொழுது இந்த சூழலை எப்படி கையாள்வது என்று தான் விளங்கவில்லை.
அருகிலேயே அரசமரம் இருக்கவும், யாரின் பார்வையிலும் படாதவாறு மரத்திற்கு அருகில் சென்று நின்று கொண்டாள்.
தன் நிலையை யாரும் கண்டுகொள்ள கூடாதே என்ற பதட்டம் அவளுக்குள் இருந்தாலும், இப்பொழுது எப்படி வீட்டிற்கு செல்வது என்று தான் அவளுக்கு சற்றும் புரியவில்லை.
பதட்டத்தில் வியர்வை முத்துக்கள் பூக்க, சற்று படபடப்பாக தான் நின்றிருந்தாள்.
சற்று தூரத்தில் தன் தங்கையுடன் வந்து கொண்டிருந்த பொற்செல்வனின் விழிகளில் விழுந்தாள் செந்நிலா.
உறவினர்கள் தான். ஆனாலும், இருவரின் குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை, உறவு கிடையாது. ஆனாலும், அவளின் பாவனை எதுவோ சரி இல்லை என்று அவனுக்கு உணர்த்தியது.
#####

Last edited: