மழை - 16
பெரிய வீட்டின் முதல் விசேஷம் என்பதால் சொந்த பந்தங்கள் அனைவரும் படை சூழ்ந்து விட்டனர்.
இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றது காமாட்சி பாட்டி தான்.
ஆனால், என்னவோ இன்று காலை முதலே அவரின் முகம் சரியில்லை.
நாளை செந்நிலாவிற்கு திருமணம் நடக்கவிருக்கும் அதே மண்டபத்தில் தான், இன்று பொற்செல்வனுக்கும், இந்திராவிற்கும் நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால், நிச்சயத்திற்கு அவர்களின் குடும்பத்தை இவர்கள் அழைக்கவில்லை. அவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எப்படியும் இவர்களுடன் உறவு கொண்டாட அவர்களும் எண்ணவில்லை தானே. ஆகையால், பெரிதாக அவர்களுக்கு இதில் எந்த ஒரு பாதிப்பும், மனவருத்தமும் ஏற்படவில்லை.
பட்டு வேட்டி சட்டையில் படிய வைத்த சிகையை ஒற்றைக் கையால் கோதிவிட்டுக் கொண்டே கம்பீரமாக நின்றிருந்தான் பொற்செல்வன்.
இந்திராவை சபைக்கு நடுவே அழைத்து நிச்சய புடவையை வழங்கியவர்கள் அதை மாற்றி வருமாறு கூறிய நொடி யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சட்டென மயங்கி சரிந்தாள் இந்திரா.
பதறிய வள்ளி, "அம்மாடி இந்திரா, என்ன ஆச்சு?" என்று அவளை நோக்கி ஓடவும்.
உமாவும், காமாட்சியும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ந்து விழித்தனர்.
இந்திராவின் அருகில் பதட்டத்தோடு ஓடிவராமல் அவர்கள் இருவரும் திருதிருவென விழிப்பதைக் கண்ட கீதாவிற்கு இங்கு ஏதோ சரியாக படவில்லை.
உறவுக்கார பெண்மணி ஒருவர் வேகமாக இவர்களை நோக்கி வந்தவர். இந்திராவின் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப முற்பட்டவாரே அவளின் நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டார்.
அவரின் கண்கள் இரண்டும் தெறித்து விழுந்து விடும் அளவிற்கு பெரிதாக விரிந்துக் கொண்டது.
"அம்மாடி வள்ளி, நிச்சயம் பண்றதுக்கு முன்னாடி பொண்ணுக்கு இதுல விருப்பமா இல்லையான்னு விசாரிக்கிறதில்லையாமா?".
வள்ளியின் உறவுக்கார பெண்மணி தான் அவர்.
"ஏன்மா என்னாச்சு?".
"வள்ளி பொண்ணு மாசமா இருக்கு. சபைக்கு நடுவுல சத்தமா சொன்னா எல்லார் காதுலயும் விழுந்திடுமேனு தான் உன்கிட்ட மட்டும் சொல்றேன். நிச்சயம் பண்றதுக்கு முன்னாடி என்ன, ஏதுன்னு விசாரிங்க" என்று வள்ளியிடம் கிசுகிசுத்துவிட்டு சென்று விட்டார்.
வள்ளிக்கு பேச்சே எழவில்லை. அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்திருந்தவர், கீதா அவரின் தோளைத் தொட்டு, "என்னக்கா என்ன ஆச்சு?" என்கவும் தான் சுய நினைவு பெற்றவராக எழுந்து நின்றார்.
நேராக தன் கணவரிடம் சென்றவர், "ஏங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் உள்ள வாங்க" என்று மணமகன் அறைக்கு அழைத்து சென்று விஷயத்தை கூறவும் தேவராஜால் இதை நம்பவே முடியவில்லை.
"என்ன வள்ளி சொல்ற, நிச்சயம் வரைக்கும் வந்துட்டு இப்படி சொன்னா எப்படி. அவங்க ஏதாவது தப்பா பார்த்து சொல்லப் போறாங்க".
"ஐயோ! அவங்க என்னோட சொந்தக்காரங்கன்றதுக்காக மட்டும் நான் இதை நம்பலைங்க. அவங்க வைத்தியம் பார்க்கிறவங்க. நாடி பிடிச்சு பார்த்தாலே இதையெல்லாம் சரியா கணிச்சு சொல்லிடுவாங்க. அதை வச்சு தான் சொல்றேன். இது நம்ம பையனுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்ங்க, அப்படியே விட்டுட முடியாதுல" என்று பரிதவிப்பாக கலங்கிப் போய் கூறினார்.
அதற்குள் இவர்களை காணாமல் குடும்பத்தினர் மொத்த பேரும் அறைக்குள் வந்து விட்டனர்.
காமாட்சி என்றும் இல்லாத திருநாளாய் தன் பற்களை இளித்துக் கொண்டே, "என்ன வள்ளி, ரெண்டு பேரும் உள்ள வந்துட்டீங்க. வாங்க தட்ட மாத்த நேரம் ஆகுதுல்ல. இந்திராவுக்கு காலையிலருந்து சாப்பிடாம இருந்ததுல தான் சொணங்கி வந்திருக்கு போல. இப்ப கொஞ்சம் பரவாயில்ல. புடவைய கூட மாத்திட்டு வந்துட்டா" என்று எதுவுமே நடக்காதது போல் பேசினார்.
"ஏம்மா இந்திரா மாசமா இருக்க விஷயம் உனக்கு முன்னாடியே தெரியுமா?" என்று அவரை உறுத்து விழித்துக் கொண்டு கேட்டார் தேவராஜ்.
அவரின் வார்த்தையில் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்து பார்க்க.
"என்ன.. என்ன சொல்லுத தேவா, வள்ளி இவன் என்ன சொல்றான்? இந்திரா மாசமா இருக்காளா.. இப்பதேன் நிச்சயமே பண்ண போறோம். நம்ம ஒன்னும் பசங்கள அந்த அளவுக்கு பழகவிடலயே" என்று விழிகள் ஓரிடத்தில் நிலைத்து நில்லாமல் அங்கும் எங்கும் அலைப்பாய சூழ்நிலையை சமாளிக்க வேண்டிப் பொய் உரைத்தார்.
"அம்மா போதும் நிப்பாட்டு! அவ மாசமா இருக்கா அத பத்தி கேட்டா எம்பையன் மேலயே தப்பு சொல்ல பாக்குறியா நீ" என்று கத்திவிட்டிருந்தார்.
"ச்ச.. ச்ச.. நம்ம செல்வாவ பத்தி நான் ஏன் தப்பா சொல்ல போறேன். நீ கேட்டன்னு தான் அப்படி சொன்னேன். மத்தபடி, வேற ஒன்னும் இல்ல. சரி, வாங்க நேரம் ஆகுதுல தட்ட மாத்திடுவோம்" என்று தன் பிடியிலேயே குறியாக இருந்தார்.
"அம்மா நான் இங்க என்ன பேசிட்டு இருக்கேன். நான் சொல்ற விஷயத்த கேட்டு கொஞ்சம் கூட பதட்டம் ஆகாம சாதாரணமா பேசுற. இந்திரா மாசமா இருக்காளா?".
அவரின் குரல் கணீரென்று அந்த அறைக்குள் ஒலித்தது. தன் கடைசி வாக்கியத்தில் மட்டும் சற்று அழுத்தத்தைக் கொடுத்து கண்டிப்புடன் கேட்டிருந்தார்.
ஆம், மாசமாக தான் இருக்கிறாள். இதைப்பற்றி உமாவிற்கும், காமாட்சி பாட்டிக்கும் கூட நேற்றுதான் தெரிய வந்தது.
ஆரம்பத்தில் தலையில் அடித்துக் கொண்டு அழுதவர்கள். நாளை நிச்சயம் என்னும் நிலையில் வேறு என்ன செய்து விட முடியும் என்று முதலில் நிச்சயத்தை முடிப்போம். பிறகு, இந்த குழந்தையை கலைத்துவிட்டு பொற்செல்வனுக்கே திருமணம் முடித்துக் கொடுத்துவிடலாம் என்ற எண்ணத்தோடு தான் இதுவரை அமைதி காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், இப்பொழுது விஷயம் அனைவருக்கும் தெரிந்து விட்டது. திருடனுக்கு தேள் கொட்டிய நிலைதான் அவர்களுக்கு.
"இல்ல தேவா, உன்கிட்ட யாரோ பொய் சொல்லி இருக்காங்க".
"பொய் யாரோ சொல்லலமா. நீ தான் சொல்ற, இதுவே நான் சொல்ற விஷயம் பொய்யா இருந்திருந்தா, இந்நேரம் நீ எப்படி கோபப்பட்டிருப்பன்னு எனக்கு தெரியாதா.. நீ இவ்வளவு சாந்தமா பேசுறதுல தான் எனக்கு சந்தேகமே அதிகமாகுது. ராஜா நம்ம ஃபேமிலி டாக்டர வர சொல்லு, இந்திராவ செக் பண்ணி பார்த்துடுவோம்" என்றார் தன் அன்னையை உருத்து விழித்துக் கொண்டே.
இதற்கு மேல் மறைக்க முடியாது என்று எண்ணிய காமாட்சி, "ஆமா தேவா, ஆமா.. அவ இப்போ மாசமா தான் இருக்கா போதுமா" என்று ஏதோ தவறே செய்யாதது போல் கத்தி இருந்தார்.
அவரின் வார்த்தையில் பேச்சற்று அதிர்வது இப்பொழுது தேவராஜின் முறையாகிற்று.
காமாட்சி கோபக்காரர் என்று தெரியும். அதிகமாக வார்த்தைகளை விடுபவர் என்றும் தெரியும். ஆனாலும், தன் பேத்திக்காக பேரனின் வாழ்க்கையை இப்படி பனையம் வைப்பார் என்று அவர் ஒருநாளும் நினைத்தும் பார்க்கவில்லை.
அதிர்ந்து போய் நின்று விட்டார் தன் அன்னையின் இத்தகைய செயலில்.
"அம்மா என்னம்மா சொல்ற நீ?" என்று காமராஜ் அதிர்ந்து கேட்க.
"ஆமா, அவளுக்கும் செல்வாக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா, அவ எவனையோ காதலிச்சு ஏமாந்து வயித்துல புள்ளைய வாங்கிட்டு வந்து நிக்கிறா. நேத்துதான் எங்களுக்கே தெரியும். கடைசி நேரத்துல வந்து என்னன்னு சொல்லி இந்த நிச்சயத்த நிறுத்துறது. அதுவும் அவ காதலிச்சவன் அவள ஏமாத்திட்டு போயிட்டானாம். நம்ம வீட்டு பொண்ணுப்பா இந்திரா. அவ வாழ்க்கைய அப்படியே போகட்டும்னு அம்போனு எப்படி விட முடியும். அதான் நிச்சயம் முடிஞ்ச பிறகு அந்த புள்ளைய கலைச்சிட்டு நம்ம செல்வாக்கே நல்லபடியா கல்யாணம் செஞ்சு வைக்கலாம்னு.." என்று அவர் கூறி முடிப்பதற்குள்ளாகவே, "அம்மா!" என்ற தேவராஜின் கர்ஜனை அந்த அறையையே அதிர வைத்திருந்தது.
அனைவரும் திடுக்கிட்டு தேவராஜின் புறம் திரும்பவும்.
"என்ன பேசுற நீ, குழந்தைய கலைச்சிட்டு எம்மவனுக்கு கட்டி வைக்க போறியா.. எங்கள பார்த்தா உங்களுக்கெல்லாம் என்ன கேனையனுங்க மாதிரி இருக்கா. சொந்தம் விட்டுப்போயிட கூடாது. தங்கச்சி புருஷன் சரியில்லாம ஊதாரி தனமா கெடக்கான். அதனால தங்கச்சி பொண்ணுங்க வாழ்க்கை வீணா போயிடக் கூடாதேன்னு தான் என் தங்கச்சி மகள எங்க வீட்டு மருமகளா கொண்டு வர நான் சம்மதம் சொன்னேன். ஆனா, தங்கச்சி மக இப்படி நடத்த சரியில்லாம இருக்கும்போது எம்புள்ள வாழ்க்கையே போனாலும் பரவாயில்லனு என் தங்கச்சி மக வாழ்க்கை தான் முக்கியம்னு நினைக்கிற அளவுக்கு எனக்கு ஒன்னும் பெருந்தன்மையோ, பெரிய மனசோ கிடையாது" என்று ஒவ்வொரு வார்த்தையையும் சூடாக பேசினார்.
உமா தன் அண்ணனின் முகத்தை நிமிர்ந்தும் பார்க்க தைரியமில்லாமல் தலை தாழ்த்திக் கொண்டு முந்தானையால் வாய் பொத்தி அழுகையோடு நின்றிருந்தார்.
ஓடிச் சென்று அவரின் கையைப் பற்றிக் கொண்டார் காமாட்சி.
"ஐயா தேவா, இப்படி எல்லாம் சொல்லாதய்யா. இந்திரா ஏதோ வயசு கோளாறுல தெரியாம தப்பு பண்ணிடுச்சு. நம்ம வீட்டு பொண்ணு அதோட வாழ்க்கை நல்லபடியா அமையனும்ன்ற எண்ணம் உனக்கும் இருக்கு தான. பிள்ளைய கொடுத்தவன் ஏமாத்திட்டு போயிட்டான். அதுக்காக அவள அப்படியே விட்டுட முடியுமாய்யா.. பொம்பள புள்ள வாழ்க்கைய்யா கொஞ்சம் யோசிச்சு பாரு, நம்ம குடும்பத்துக்கு ஏற்பட்ட அசிங்கத்த நாம தானே சரி செய்யணும். செல்வாவ கல்யாணம் பண்ணி வச்சா அவ நிச்சயமா செல்வாக்கு நல்ல மனைவியா இருப்பா. இனி அவ இப்படி எந்த ஒரு தப்பும் செய்ய மாட்டா. நான் உனக்கு வாக்கு கொடுக்கிறேன்" என்று மன்றாடலாக பேசினார்.
அவரின் வார்த்தையைக் கேட்டு அங்கே நின்றிருந்த அனைவருக்கும் வெறுத்துப் போய்விட்டது.
தேவராஜ் தன் முகத்தை சுருக்கி நம்ப முடியாமல் அவரைப் பார்த்தார்.
"அத்த என்ன பேசுறீங்க நீங்க, நான் வச்சிருக்குறது ஒரே புள்ள. கொஞ்ச நேரத்துல என் மகனுடைய வாழ்க்கையவே இப்படி அழிக்க பாத்துட்டீங்களே நீங்க.. நீங்க என்ன பேசினாலும் அமைதியா அடங்கிப் போனேன்னா அதுக்கு காரணம் வயசுல பெரியவங்கன்ற மரியாதைக்காக தான். வயசுல பெரியவங்களா இருந்துகிட்டு பேசுற பேச்சா இதெல்லாம்?" என்று எப்பொழுதுமே அமைதி காக்கும் வள்ளியே வாயைத் திறந்து விட்டார்.
தன்னை எத்தனை இழிவாக பேசும் போதும், நடத்தும் போதும் அமைதி காத்த வள்ளியினால் தன் பிள்ளைகளின் வாழ்க்கை என்று வரும் பொழுது அப்படி அமைதி காக்க முடியவில்லை.
தன் மாமியாரின் நடத்தையினால் தோன்றிய கோபமோ, வருத்தமோ, ஆதங்கமோ அவரையும் பேச வைத்து விட்டது.