பரிதியின் பவித்ரமே -05
அருளின் மனைவி இளம்பரிதியின் திருமணம் நின்றதில் துவங்கி வரதட்சணை கேட்டது என்பது வரை பேசியிருக்க, மற்றவர்கள் "அதான் அம்சமா இருந்தும் கல்யாணம் ஆகலையா?"என்று கேட்டனர்.
சிலரோ "நல்ல அமரிக்கையான பையனாதேன் இருக்காப்டி. நம்ம வளசல்ல இப்படி ஒரு கலரு உண்டா?, தேவகி வீட்டுக்காரர் கூட கொஞ்சம் கலரு கொறைச்ச தான், இந்த பையன் வெளுப்பா வாட்ட சாட்டமா இருக்காப்டி. எனக்கு மவ இருந்தா கூட நாப்பது பவுனு போட்டு கட்டி வச்சிருவேன். என்ன..? வயசுதேன் இடிக்குது"என்றார் ஒரு பெண்.
அதன் பிறகு ஏதோ கிசுகிசுத்து பேசி சிரித்துக் கொண்டார்கள்.
'என்னவோ பேசட்டும்' என்று எண்ணியவனுக்குத் தெரியவில்லை அவனது அந்தரங்கம் கடை பரப்பப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளாகி அமளிதுமளியாகிறது என்று.
மாடியறையில் அமைதியாக வந்து படுத்து விட்டான். நாள் முழுவதும் அலைந்தது வேறு உடலை அசதியாக உணர வைத்தது. 'ஒரு சில நேரங்களில் யாருக்காக சம்பாதிக்கிறோம் எதற்காக சம்பாதிக்க வேண்டும்?' என்று எல்லாம் தோன்றும் தான். ஆனால்,' கடைசி வரை திருமணம் ஆகாமல் இப்படியே இருந்தால் நம்மை பார்த்து கொள்ளவாவது இந்த பணம் உதவட்டுமே' என்று எண்ணினான். ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாமா என்ற யோசனை கூட அடிக்கடி வருகிறது தான்.
அப்போதெல்லாம் யாராவது ஒருவர் வரன் கொண்டு வருவதும் பின் தயங்கி அந்த முடிவை கைவிடுவதுமாக இருந்தான். தனி ஒருவனாக பிள்ளையை வளர்க்க நம்மால் முடியுமா என்ற எண்ணம் வேறு அவனுக்கு.
படுத்து இருந்தவன் சிறிது நேரம் கைபேசியை துழாவி விட்டு உறங்க முற்பட ,அருள் கதவைத் தட்டினான்.
"ண்ணே சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன்"என்று குரல் கொடுக்கவும், எழுந்து வந்து கதவைத் திறந்தவன், "நீ ஏன் டா அலையிற ஃபோன் பண்ணி இருக்கலாம் தானே?"என்று கடிந்து கொண்டான்.
"தூங்குறியோனு நினைச்சேன் ண்ணா. சரி வாங்க சாப்பிட்டு தூங்குங்க"என்று பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போய் உள்ளே திறந்து வைத்தான்.
"எல்லாரும் சாப்டாச்சா?"என்று கேட்டபடியே கை கழுவி விட்டு வந்தமர
"பந்தி போயிட்டு இருக்கு எம்மாமனாரு உன்னை கீழே தான் கூப்பிட சொன்னார். நான் தான் அவர் வேலை முடிச்சு தூங்குவார் தொல்லை பண்ண வேண்டாம்னு சொல்லிட்டேன்"என்றான் தட்டில் சோற்றை போட்டு குழம்பை ஊற்றியபடி.
"ஏன் டா வந்தவங்களுக்கு கறி சோறு போடாம இதென்ன இப்படி சாம்பாரை ஊத்தி இருக்க?"என்று அவன் சிரிக்கவுமே
"எல்லாம் கெடாவெட்டுல பாத்துக்கலாம்னு பெரிய மாமனார் சொல்லிட்டாருண்ணே. அதான் மரக்கறி. நாளைக்கு இங்க வர்றாரு"என்றதும்
"பெரிய மாமனார் னா பயமோ வந்திருக்கவங்களுக்கு?"என்று உணவை உண்டபடி கேட்க
"ஹ்ம்ம், ஆமா ஆமா சொத்து முழுசும் அவர் கிட்ட இருக்கு. எம்மாமனார் அவ்வளவு திறமை இல்லண்ணே. இவர் எடத்தை புடினா மடத்தை புடிச்சுருவாரு. அவர் மேல பயம் இருந்தாலும், அங்கிட்டு போய் பொறணி தான் பேசுவாங்க"என்றான் அறையை சுற்றி பார்வையை சுழல விட்டபடி.
"பொறணி பேசுற அளவுக்கு என்ன பண்ணாரு?"இளம்பரிதிக்கு பேச்சு சுவாரஸ்யமாக போகவே அதனைத் தொடர்ந்து பேசினான்.
அருள் அங்கும் இங்கும் பார்த்து விட்டு, "யாரோ ஒரு பொம்பளை கூட தொடுப்பாம்!"என்றான் மெதுவாக.
"அடப்பாவி!"என்று முணுமுணுக்க அருள் மேலும் தொடர்ந்து "அந்த பொம்பளைக்கு பையனும், பொண்ணும் இவருக்கு பொறந்தது இருக்கறதா கேள்வி. ஆனா இதுவரைக்கும் ஒருத்தரும் நேர்ல பார்த்து சொல்ல காணும்."
"ஏன் டா அவரோட அப்பா அம்மா எதுவும் கண்டிக்லையா..? அவர் பொண்டாட்டி கூடவா கண்டுக்கல"என்று வினவினான் இளம்பரிதி..
"கெழவன் கெழவிக்கு விஷயமே அஞ்சாறு வருசத்துக்கு முன்னுக்க தான் தெரிய வந்திருக்கு. கமுக்கமா மவனை கூப்பிட்டு விசாரிக்கவும் ஆமா னு ஒத்துக்கிட்டு எனக்கு வயசுக்கு வந்த பொண்ணும் பயலும் அங்க இருக்காங்கனு சொல்லிப்புட்டாராம்.
அந்த கெழவி வாய்க்கு பத்தாம அது உன் புள்ளைனு தெரியுமா அது இதுன்னு பேசி சண்டை போடவும், மருமக காதுக்கு விஷயம் போயி அந்த அத்தை கூடப் பிறந்தவங்களை கூப்பிட்டு பஞ்சாயத்து வைக்க, அப்புறம் மனுசன் எங்கையும் போகாம வீட்டோட இருந்திருக்கிறார். கெழவன் போகவும் அப்பப்ப போயிட்டு வர்றதா கேள்வி பட்டேன். ஆனாலும் கெத்தை விடாம திமிரா தான் இருக்கார்."
"தைரியம் தான் டா அவருக்கு. ஆனாலும் உன் பெரிய மாமியார் அந்தாளை தொரத்தி விட்டு இருக்கலாம்"என்றான் சற்று கோபமாக
"அதையும் செய்ய தான் பார்த்து இருக்காங்க. அதுக்கு அவரில்ல.. ஏதாவது பேசினா ஆண் வாரிசு அங்கே தான் இருக்கான் எனக்கு. சொத்து முழுவதையும் அவனுக்கு எழுதி வச்சு இங்கே கூட்டி வந்து இருக்க வைப்பேன் னு மிரட்டினாராம் அதனால எல்லாரும் அமைதியா இருக்காங்க"என்ற அருள் "ஊரில் உலகத்தில் நடக்காததையா நான் பண்ணிட்டேன் போய் வேலையை பாருங்கடா னு திமிரா பேசி இருக்கிறார்"என்றான்.
"தைரியம் ஜாஸ்தி தான் டா ஆனா அவரையும் மரியாதையா உன் மாமனார் வீட்டில் நடத்துறாங்க பாரு"என்றதும்
"சும்மாவா... ஊரில் பெரிய கை. சொத்துபத்து அந்த ஊர்ல பாதி அவருது தான். தின்னவேலில ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் லாட்ஜ் லொட்டு லொசுக்குனு ஒரு ராசாங்கமே நடத்துறாரு"என்றான் வியப்பாக
"என்ன இருந்து என்ன பிரயோஜனம்...? மனுசனுக்கு ஒழுக்கம் இல்லையே."என்றான் இவன்.
"அதான் பாரு. நல்லவனை எவன் மதிக்கிறான்? சரிண்ணே நீ படு நான் போயி படுக்கிறேன் இன்னும் ரெண்டு நாளைக்கு செவன் ராத்திரி தான் எனக்கு"என்று அலுத்தபடி அருள் போய் விட்டான்.
இளம்பரிதி சிரித்துக் கொண்டான். 'நல்லவன் எவனுக்கு நல்லது நடக்குது' என்று புன்னகை முகிழ்க்க, அப்படியே உறங்கிப் போனான்.
அவன் எழும் போதே கீழே கசகசவென்று பேச்சு சத்தம் தான் கேட்டது. காலை பொங்கல் நறுமணம் ஒரு பக்கம், மறுபக்கம் சாம்பார் கொதித்து வந்திருக்கும் போல அந்த வாசனையும் எதையோ பொறித்து எடுக்கும் வாசனையும் கலவையாக வந்தது. 'அநேகமாக உளுந்தவடை அல்லது பூரியாக இருக்க வேண்டும்' என்று எண்ணிக் கொண்டான்.
அவன் வீடு தான் ஆனால் கீழே போக கூச்சமும் சங்கடமுமாக இருந்தது அவனுக்கு.
சற்று நேரத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்ள, மேலிருந்தபடியே எட்டிப் பார்க்க வெள்ளை நிற வால்வோ ஒன்று வந்து நின்றது.
'யார்றா இது?' என்று யோசிக்கும் போதே வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை சகிதமாக ஒரு நபர் கீழிறங்கினார். அவர் இறங்கும் முன்பே டிரைவர் பவ்யமாக கதவைத் திறந்து விட்டிருந்தான்.
'பார்றா வால்வோ எக்ஸ் சியா பெரிய ஆள் தான் போல?!' என்று முணுமுணுத்தவன் அந்த நபரை ஆழ்ந்து பார்க்க, தெறி படத்தில் வரும் மகேந்திரன் போலவே இருந்தார் அவர். முகத்தை பார்த்தால் அத்தனை சாந்தம். இவர் தான் அருளோட பெரியய்யய மாமனாரோ என்று அவனுக்குள்ளேயே கலாய்த்து கொண்டபடி நகர்ந்து விட்டான் அதற்கு மேல் அங்கே நிற்காமல்.
சற்று முன் கேட்ட கசகச சத்தம் எல்லாம் நின்று போயிருந்தது அவ்வபோது அருளின் குரல் கேட்டது அதன் பிறகு ஒரு முணுமுணு சத்தம் அவ்வளவு தான்.
"பெரிய அப்பாடக்கரா இருப்பார் போல இதுவரைக்கும் கேட்ட சத்தம் கூட நின்னு போச்சே"என்று சொல்லி சிரித்தவன் ,"நாம நம்ம வேலையை பார்க்க போவோம்"என்று சொல்லியபடி கிளம்பி கீழே வந்தான்.
அவனைக் கண்டதும் அருள் அவனருகில் ஓடி வந்து நின்றவன் சற்று மெதுவாக "ண்ணே ஒரு வணக்கம் மட்டும் சொல்லிட்டு போயிரு"என்றான்.
"நான் எதுக்கு டா?"என்றவன் அவனின் முகத்தைப் பார்த்து விட்டு "சரி வா போகலாம்"என்று அவனோடு நடந்தான்.
ஏதோ அவர் வீட்டில் அமர்ந்து இருப்பதை போல அதிகார தோரணையில் அமர்ந்திருந்தார் அருளின் பெரிய மாமனார் உலகநாதன்.
"வாங்க மாமா!"என்ற இளம்பரிதியின் அழைப்பிற்கு வெறுமனே ஒரு தலையசைப்பு தான். சிரிப்பு என்பது அளந்து வைத்தாற்போல் ஒரு சென்டிமீட்டர் இருக்க இளம்பரிதி கடுப்பில் முகம் சிவந்து நின்றான்.
"சரிண்ணே வேலைக்கு போறதுனா கிளம்பு ண்ணே, இங்கே நான் பார்த்துக்கிறேன்"என்று அருள் பரிதியை அனுப்ப பார்க்க
"தம்பியை சாப்பிட கூப்பிடுங்க மாப்ளை"என்று கூறியது வேறு யாரும் அல்ல அருளின் மாமனார் தான்.
"இல்லை இருக்கட்டும் மாமா. நீங்க சாப்பிடுங்க வேலைக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன்"என்று அவன் கிளம்பி விட, அருள் தான் "அண்ணனுக்கு"என்று ஆரம்பித்து இளம்பரிதியின் தொழில் பற்றி கூறிக் கொண்டிருந்தான்.
உலகநாதன் புருவத்தை நெரித்தபடி அனைத்தையும் கேட்டவர் ,"இவ்வளவு சம்பாதிச்சு எதுக்கு ஆகுது புள்ளையா குட்டியா?"என்று சொல்லி விட்டு அருளிடம் "எதுக்கும் இவர் கூட எல்லா நேரமும் இருங்க பிற்காலத்தில் யூஸ் ஆகும்"என்றார் சூசகமாக. அருள் மையமாக தலையாட்டி வைத்தான்.
இளம்பரிதியின் வீட்டையும், அவனது செல்வநிலையையும் கணக்கிட்டது உலகநாதனின் வியாபார மூளை.
"காசுக்காரன் தான் கோடியில் சொத்து வச்சிருந்தாலும் அடக்க சடக்கமா இருக்கான். ஆனாலும் ஒரு திமிரு உள்ள இருக்க தான் செய்யுது"என்று தனக்குள்ளே முனங்கிக் கொண்டார் எவருக்கும் கேளாமல்.
சட்டென, "அந்த பையன் வயசு என்ன?"என்றார் அருளிடம்
"முப்பத்தி ஆறா ஏழா தெரியலை மாமா ஆனா என்னை விட ஏழெட்டு வருஷம் பெரியவர்"என்றான் அருள்.
"ஹ்ம்ம்"என்றவர், "சாப்பாடு எடுத்து வச்சாச்சா?"என்ற அவரின் கணீர் குரலில் அவரது மனைவி வேகமாய் ஓடி வந்து"ஆச்சுங்க. நீங்க வந்தா இலையை போட்டுடலாம்"என்றார் பவ்யமாக.
"மூத்தவ எங்க?"அடுத்ததாய் ஒரு கேள்வி.
" கீதா பிள்ளைக்கு சோறு ஊட்டுறா"என்றவர் அவர் கேளாமலேயே,"மருமகன் பக்கத்தில் தான் இருக்கார்"என்றார்.
"ஹ்ம்ம்"என்றவர் "சாப்டதும் எல்லாரும் சேர்ந்து கோவில்ல இருக்கணும் அதுக்கு தோதா பாருங்க"என்றதில் கூட்டம் கலைந்து உணவுக் கூடத்தை நோக்கி நகர்ந்திருந்தது.
போட்டிருந்த டைனிங் டேபிளை மூலையில் ஒதுக்கி வைத்து விட்டு அதிகம் பேர் உட்கார்ந்து உண்ணும் அளவிற்கு இடத்தை சுத்தம் செய்திருக்க, ஆண்கள் முதலில் அமர்ந்து கொண்டனர்.
உலகநாதன் அனைத்தையும் அவதானித்தபடி வந்தமர, அங்கே சமையலறையை பூட்டி வைத்திருப்பது கண்டு புருவம் முடிச்சிட அருளைப் பார்த்தார்.
"அப்படி நம்பிக்கை இல்லாத வீட்டில் ஏன் தங்க வேண்டும்?"என்ற எண்ணம் அவருள். அதை அருளிடம் பல்லைக் கடித்தபடி கேட்டும் வைக்க
"அய்யோ நீங்க நினைக்கிற மாதிரி இல்ல மாமா!"என்றவன் "அண்ணன் இங்கே சமைக்கிறது இல்லை. அதான் சுத்தம் பண்ணி பூட்டி போட்டுட்டாரு அவங்களுக்கு தகுந்த மாதிரி கிச்சன் மேல ரெடி பண்ணி இருக்காரு"என்று விளக்கம் தந்தான்.
அவரது மனைவியோ, "தங்க வந்த இடத்தில் போட்டதை தின்னுட்டு சாமியை கும்பிட்டு கிளம்புவாரா?, ஆயிரெத்தெட்டு கேள்வி கேட்பாரு"என்று மகளிடம் சொல்லி காய்ந்தார்.
"ம்மா பேசாம இருங்க"என்று மகள் கண்டிப்பதில் அவர் அமைதியாக "கோதாவரி!"என்றழைத்தார் உலகநாதன்.
அழைத்ததிலேயே கோதாவரி கோமாநிலைக்கு போய் விட்டோமோ என்று திகைத்து விழித்தார்.
...... தொடரும்.