பரிதியின் பவித்ரமே -06
பரிதி கிளம்பிய பிறகு அவனைப் பற்றிய பேச்சு அங்கே சில நிமிடங்கள் கேட்டாலும் அதன் பிறகு அனைவரும் வந்த வேலையில் இறங்கி விட்டனர்.
கோவிலுக்குச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் அருள் செய்திருக்க, கோவில் தர்மகர்த்தா ஊர் தலைவர் என்று அருளின் பெரிய மாமனார் பற்றி கூறி மரியாதை செய்யும் படி கேட்டுக் கொண்டிருந்தான் பரிதி. அவர்களும் சரியென்று கூறியிருந்தனர். அவன் தனக்கான சொந்தத்திற்கு இது போல எப்போது கேட்பான் என்று தோன்றினாலும் வெளிக்காட்டவில்லை தர்மகர்த்தா. பரிதி எப்போதும் திருவிழா என்று எந்த சொந்தத்திற்கும் அழைப்பு விடுத்ததில்லை. அவனுக்கு அந்த சந்தர்ப்பமே அமையவில்லை என்று தான் கூற வேண்டும். அதுதான் தங்குவதற்கு இடம் வேண்டும் என்று அவர்களே வந்து விடுகிறார்களே பிறகெங்கே அழைப்பு விடுக்க. அவனின் பெற்றோர் இருந்தவரை அழைப்பு வைத்தார்கள் தான்.
"நீயே வயசான காலத்துல செரமப்படுற..."என்று சொல்லி விட்டு வராமல் எல்லாம் இருக்கவில்லை உறவினர்கள். "சொன்ன அப்புறம் வரலைனா நல்லா இருக்காது பாருங்க"என்று சொல்லி கொண்டு வரத் தான் செய்தார்கள்.
தெருவெங்கும் மாவிலைத் தோரணம் வாழைமரம் என்று அலங்கரித்திருக்க ஆங்காங்கே பேனர்கள் மினுமினுத்தது இளைஞர்களின் ஸ்டைலான புகைப்படங்களுடன். அந்த ஊர் அரசியல் பிரபலம் முதற்கொண்டு அதில் இடம் பிடித்திருக்க ஒலிப்பெருக்கி பத்தடிக்கு ஒன்றாக கட்டப்பட்டு பாட்டும் சத்தமுமாய் ஊரை பரபரப்பில் ஆழ்த்தியிருந்தது.
அருளின் சொந்தம் எல்லாம் வந்திறங்கிய வேளையில் ஊர் தர்மகர்த்தாவோடு தனபாலும் நின்றிருந்தார் அவர்களை வரவேற்கும் விதமாக.
"வாங்க வாங்க சம்பந்தி"என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்ற தனபால் அங்கே வீட்டிற்கு வந்து இருக்க முடியாததற்கு மன்னிப்பும் கேட்டு அவர்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.
உலகநாதன் அனைத்திற்கும் ஒரு தலையாட்டு மட்டும் தான்.
"அப்படியே வாயத் தொறந்து பேசிட்டாலும் கப்பலு கரண்டு கம்பியில ஏறிடும்"என்று முனகிக் கொண்டே பின்னே சென்றார் கோதாவரி. சற்று முன் அனைவரும் முன்பும் சத்தமாய் அழைத்து திட்டியதில் மனவருத்தம் அவருக்கு. ஆனால் அதை வெளிக்காட்ட முடியாதே. காட்டினால் விடுவாரா உலகநாதன்.
பக்தியும் பரவசமுமாய் அம்மனை தரிசித்து விட்டு பூசாரி செய்த மரியாதையையும் ஏற்றுக் கொண்டு பக்திபழமாய் நின்ற உலகநாதனை அனைவரும் ஒரு வித வியப்பாகவே பார்த்து நின்றனர்.
'ஆளைப் பார்த்தா அமுக்குணி செய்ற வேலை எல்லாம் துர்க்குணி' என்பது போல தான் உலகநாதன் குணம். தான் செய்தது தவறு என்று ஒப்புக் கொள்ளாத மனிதர். வெளியே இவருக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது என்று தட்டிக் கேட்ட மனைவியை "நீ ஒழுங்கா பணிஞ்சு இருந்தா நான் ஏன் வெளியே தேடப் போறேன். எப்ப பார்த்தாலும் சீக்கு புணினு ஒதுக்கி வச்சா இப்படி தான் ஆகும்"என்று அவரின் காது கூசும் அளவிற்கு பேசிவிட, அதன் பிறகு வாய் திறப்பாரா அந்த உத்தமி.
"உன் ஆணவத்தை அடக்க ஒருத்தன் வராமலா போவான்"என்று சாபமிட்டபடி தான் கோதாவரி தன் மீதி வாழ்வை கடத்தினார்.
உலகநாதனுக்கு வெளியே ஒரு குடும்பம் இருக்கிறது என்று தெரிந்தாலும் அதை ஆராய விடாமல் பார்த்துக் கொண்டது அவரின் சாமர்த்தியம்.
*********
பவித்ரா வேலைக்கு அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள்.
"என்னடி இவ்வளவு சீக்கிரம் கிளம்பற?"என்று கேட்டபடியே அவளுக்கான காலை உணவை நீட்டினார் மாதவி.
"ம்மா, இன்னைக்கு காருக்கு தேவையான மேட்ஸ், ஹாரன் எல்லாம் வருது. அதை கணக்கு பார்த்து குடோன்ல வைக்கணும் அதான் சீக்கிரம் போறேன்."என்று படபடத்தவள், "சாப்பாடு வேண்டாம் மா. நான் அங்கே பார்த்துக்கிறேன், ஆட்டோ வந்திடும் பஸ்ஸில் கூட போகலை நானு"என்று கிட்டத்தட்ட வெளியே ஓடினாள்.
"என்ன இவ..? "என்று சொல்லிக் கொண்டே மாதவி மகனை எழுப்பச் சென்றார்.
வெளியே ஆட்டோ காத்திருக்க, பவித்ரா ஏறிக் கொண்டாள்.
"அண்ணா பஸ் ஸ்டாப் போங்க"என்று சொல்லி விட்டு, "ஹலோ இன்னும் பத்து நிமிஷத்தில் வந்திடுவேன்"என்று கைபேசியில் யாருக்கோ தகவலும் கூறிக் கொண்டிருந்தாள்.
மனதில் இன்னும் படபடப்பு தீரவில்லை அவளுக்கு. யாருக்கும் தெரியாமல் முதன் முறையாக தான் செய்யப் போகும் காரியம் என்று நினைக்கும் போதே அச்சம் விழிகளில் தெரிந்தது.
ஆம் பவித்ராவின் மனதிலும் ஒருவன் இடம் பிடித்து அவனை முதல் முறையாக தனியாக சந்திக்கப் போகிறாள். சமீப காலமாக உலகநாதனின் வரவு குறைந்ததிலும், அவரை எதிர்த்து வேலைக்குச் செல்லும் தைரியத்திலும் இந்த காதலை ஏற்க முனைந்துவிட்டாள் பவித்ரா. இன்று சம்பந்தப்பட்டவனிடம் பேசிய பிறகு தன் அன்னையிடம் சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு தான் அவனை சந்திக்க இத்தனை காலையில் கிளம்பி இருந்தாள்.
மனதில் உலகநாதனை எண்ணி பயம் இருந்தாலும் முதன் முதலில் ஒருவன் தன்னை ரசித்திருக்கிறான் என்பதும், அதைக் காதலாக பறைசாற்றி தன்னிடம் கூறியதையும் எண்ணுகையில் உவகை பொங்கியது அவளுக்கு. அவள் இருந்த இடத்தில் தான் காதலோ அல்லது இளைஞர்களின் ரசிப்போ எதுவும் கிட்டவில்லை ஆனால் பேருந்தில் வரும் சமயத்தில் அது இரண்டுமே கிடைத்ததில் சில காலமாய் தனக்கும் ஒரு அன்பின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று பேரானந்தம் கொண்டாள்.
அவன் தனியே சந்திக்க வேண்டும் என்று கேட்டும், ஒரு மாதமாக இழுத்தடித்தவள், தற்போது தான் இறங்கி வந்திருந்தாள்.
ஆட்டோ பேருந்து நிலையத்தை அடைந்ததும் பணத்தை கொடுத்து விட்டு இறங்கிக் கொண்டவள், தென்காசி செல்வதற்காக பேருந்தில் ஏறிக் கொள்ள, அவள் கைபேசியும் இசைத்தது"பவி, கார்னர் சீட் பாரு"என்று குரல் கேட்கவும் இடத்தை கண்டு கொண்டவளாய் வேகமாக வர அவனோ முகம் மலர்ந்து சிரித்தான்.
"இந்த பக்கம் உட்கார் பவி"என்று ஜன்னல் இருக்கையை அவளுக்கு கொடுத்தான்.
அவளை ஒட்டிடாமல் இடம் கொடுத்து அமர்ந்திருந்தவனை நிரம்பவே பிடித்தது பவித்ராவிற்கு.
"பஸ் எப்போ எடுப்பாங்க?"என்றாள் மெல்லிய குரலில்.
"இன்னும் பத்து நிமிஷத்தில் எடுத்துடுவாங்க. உனக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரவா?"என்று கேட்க
"இல்லை வேண்டாம்"என்று மறுத்ததும்,"இல்லை தண்ணி பாட்டில் ,சிப்ஸ், பிஸ்கட், சாக்லேட் வாங்கினேன். வேற எதுவும் உனக்கு பிடிச்சா வாங்கிட்டு வரலாமேனு கேட்டேன்"என்றதும் "அங்கே போய் பார்த்துக்கலாமே?!"என்று அக்கம் பக்கம் சுற்றி சுற்றிப் பார்த்தாள்.
"மாஸ்க் போட்டு இருக்க. அப்புறம் என்ன பயம்?, யாருக்கும் தெரியாது பவி"என்று கிசுகிசுப்பாய் கூறியவன்,"மாஸ்க் போட்டு வரவும் உன் கண்ணு இன்னும் ப்ரைட்டா இருக்கு"என்றான் விழிகள் மின்ன.
நாணத்தில் தலைகுனிந்தவளோ,"பேசாம இருங்க"என்று கொஞ்சலாய் உரைத்தாள்.
பேருந்து கிளம்பியதும் டிக்கெட்"தென்காசி ரெண்டு குடுங்க" என்று வாங்கிக் கொண்டான்.
நடத்துநர் அந்த பக்கம் நகர்ந்ததும் அவள் கைகளை மெலிதாய் பற்றிக் கொண்டவன் வேடிக்கை பார்க்க பவித்ராவிற்கு தான் கூச்சமாய் போனது. அருகிலேயே நின்ற ஒரு அம்மா இருவரையும் அவ்வபோது பார்த்து விட்டு திரும்பினார்.
அவ்வளவு கூட்டம் இல்லை என்றாலும் இருவரின் நெருக்கமும் மற்றவர்கள் கவனத்தை கவர்ந்து விடக் கூடாது என்பதில் அத்தனை கவனம் இருவருக்கும்.
"ஏதாவது பேசு பவி?"என்றவன் அவளின் அமைதியில், "காருக்கு ஸ்பேர்ஸ் வாங்க வந்தா தான் பேசுவியா?"என்று கிண்டல் செய்ய, அவளுமே சிரித்துக் கொண்டாள்.
"உங்க வீட்டைப் பத்தி சொல்லுங்க"என்று கேட்க, அவனும் சில விபரங்களை கூறினான்.
"இப்போதைக்கு நாங்க மூணு பேர். நீ வந்துட்டா நாலு பேர் பவி. அப்பாக்கு என் மேல பாசம் அதிகம் ஸோ நம்ம லவ்க்கு பெருசா எதிர்ப்பு வராது. தங்கச்சிக்கு உன்னைப் பார்த்தாலே பிடிக்கும்"என்றவன் தன் வேலை பற்றி விளக்கினான்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டவளுக்கு, தன் வீட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பினால் என்ற பயமும் எழாமல் இல்லை.
"ஹோய் என்ன சைலண்ட் ஆகிட்ட...? உங்க வீட்டை நினைச்சு பயமா?, இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் என் சிஸ்டர் மேரேஜ் முடிச்சதும் நான் அப்பாவோட வந்து உன்னை பொண்ணு கேட்பேன்"என்றதும் அவன் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு விழிகள் விரியப் பார்த்தாள்.
இறங்கும் இடம் வந்ததும், "இப்பவாவது இந்த மாஸ்கை கழட்டேன்.உங்க ஊர் தாண்டி வந்துட்டோம் யாரும் கண்டுக்க மாட்டாங்க"என்று அவளை முகக் கவசத்தை கழற்ற வைத்தான்.
குற்றாலம் அவர்களை குளுமையாக வரவேற்றது. சீசன் நேரம் என்பதால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆங்காங்கே ஜோடி ஜோடியாக அலைய இவர்களை பெரிதாய் கண்டு கொள்ள யாரும் இல்லை.
"குளிக்க கூட முடியாது இங்கே ஏன் கூப்பிட்டிங்க?"என்று கடிந்து கொண்டவளை முறைத்தவன், "குளிக்க தானே அது வருவோம் ஒரு நாளைக்கு"என்று இழுத்து, "இப்போ சாமி கும்பிட்டு போக தான் வந்தோம். இங்கே பேசிட்டு இருந்தா கூட கண்டுக்க ஆள் இல்லை பவி இன்னும் ரெண்டு மணி நேரம் இங்கே இருந்துட்டு லஞ்ச் முடிச்சதும் வீட்டுக்கு கிளம்பிடலாம்"என்றான்.
"பயமா இருக்கு எனக்கு, என் அம்மா கிட்ட நான் பொய்யே சொன்னது இல்லை. இன்னைக்கு பாருங்க"என்று வருந்தியவளின் கரம் பற்றி, "இந்த ஒரு டைம் தான் இதுக்கு அப்புறம் கூப்பிட மாட்டேன் ப்ளீஸ்டா இந்த மொமெண்ட் என்ஜாய் பண்ண விடு"என்று கேட்க பவித்ரா அவன் முகம் கண்டு சம்மதித்தாள்.
அருவியில் குளிப்பதை வேடிக்கை பார்த்து நிற்க திடுமென அவன் குளிக்கிறேன் என்றதும்,' வேண்டாம்' என்று மறுத்தாள்.
"இங்கு வந்துட்டு குளிக்காம எப்படி பவி?, நான் மட்டும் குளிச்சிட்டு வர்றேன் உன்னை கம்பெல் பண்ணலை"என்றதும் அவன் ஆடைகளை வாங்கிக் கொள்ள, அவன் குளிக்கபோய் நின்று விட்டான்.
அரைமணி நேரம் வரை அதில் இருந்து வராதவன் ஒரு வழியாக வந்து சேர பவித்ரா அவனை முறைத்தாள்.
"சாரி சாரி வர மனசே இல்லை. என் டார்லிங் நீ வெய்ட் பண்ணவும் தான் வந்தேன்"என்று காதைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்க, பக்கென சிரித்தவள் "ஈரத்தில் நிற்க வேண்டாம் துடைங்க"என்று அவன் துணிகளை கொடுக்க, ஏற்கனவே கொண்டு வந்திருந்த துண்டால் துடைத்துக் கொண்டான்.
இருவரும் பேசியபடி நடந்ததில் பசியெடுத்து மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் கிளம்பினர்.
மனதில் தன் அன்னையின் பொய் கூறி விட்டு வந்தது உறுத்தினாலும் அவனின் அண்மை அதை எல்லாம் மறக்க செய்ய, அவன் கூறியதைப் போல அந்த நிமிடத்தை ஆழ்ந்து மகிழ்ச்சியாய் அனுபவித்தாள் பவித்ரா. அவளோடு நடந்து வந்தாலும் ஒரு தீண்டல் இல்லை, சீண்டல் இல்லை. அழகாய் கண்ணியமாக நடந்திருந்தான் அவளிடம்.
.... தொடரும்.