• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புது மங்கல சௌபாக்கியம் - 2

நிதனிபிரபு

Administrator
Staff member


அத்தியாயம் 2


"யோவ் சிடுவா!! சீக்கிரம் வாய்யா.. ஆபீஸ் நேரத்துல வேல பாத்தாலே பேங்க் ஆபீஸருக்கு மரியாத இல்ல.. இதுல நேரம் முடிஞ்சும் என்னய்யா பண்ணிட்ருக்க??"

வாசலில் தன் ஸ்டாண்ட் போட்ட ஸ்கூட்டியில் அமர்ந்து சைடு மிரரில் நகத்தால் தாளம் தட்டிக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா..

சும்மா இருந்த சிங்கத்தை சொறிந்து விட்ட கணக்காக, ஏன் எதற்கு என்று தெரியாமல் இதுவரை யாரிடமும் மில்லி மீட்டர் கூட அதிகப்படியாக பேசாத ஒருவன் தன்னிடம் இத்தகைய உதவி கேட்கிறான் என்றால் அவனின் அவசரம் உணர்ந்து அவனுக்கு முடிந்த மட்டும் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலே தவிர அதை தாண்டி வேறு எதுவும் யோசிக்கவில்லை..

அதுவும் இது பெரிய அதிர்ச்சி தான் இந்த உதவி தான் செய்ய கூப்பிடுகிறான் என்று தெரிந்திருந்தால் கூட அவள் செய்திருக்க மாட்டாள்.. போயாச்சு செஞ்சாச்சு இனி அதைப்பற்றி பேசி என்ன பலன் என்று அமைதியாக அமர்ந்திருந்தவள், இட காதில் சரண்யாவும், வலது காதில் அபிஷேக்கும் மாறி மாறி இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமா என்று ஆளுக்கு ஒரு காரணம் கூற இப்போது என்ன காரணம் என்று தெரிய கிறுக்கு பிடித்து காத்திருக்கிறாள் வெண்ணிலா..

தனக்காக வாசலில் ஒருத்தி காத்திருப்பததையே மறந்தவன் தன் போக்கில் தன்னுடைய கோப்புகள் அடங்கிய பையை வண்டி சீட்டில் வைத்தவன் வண்டியை எடுக்க போக ஓடிப்போயி மூச்சிரைக்க அவன் முன்னால் நின்றாள் வெண்ணிலா..

'என்ன' என்னும் விதமாக இவன் பார்க்க, "என்ன இப்படி என்னங்கற மாதிரி பாக்குறீங்க சாயந்தரம் சொல்றேன்னு சொன்னீங்கலே?!." நெற்றியை நீவி யோசித்தவன், கைபேசி விடாமல் அழைத்தது அதுவும், "இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி!!" என்ற பாடல் ஒலிக்க இவள் துடுக்காக எட்டி பார்க்க, "சாரு பப்பூ!!" என்று வந்தது..

"ஹலோ பப்பூ!!"

"மாமா!!" அழுகையில் வெடித்தது அந்த பக்கம்.

"பப்பூ!! அழுகாத டா.. நீ அழுகவே கூடாதுன்னு தானே வேண்டாத வேலைலாம் பாத்து வைக்குறேன்.." என்றவன் பார்வை வெண்ணிலாவை தொட்டு மீள, "கொழுப்ப பாரேன் சிடுவனுக்கு!" என்றவள் முறைப்பை அசட்டை செய்துவிட்டு,

"பப்பு நீ அத்தை கூட இருந்து பாத்துக்கோ.. மாமா இங்கே ஒரு வேலையா இருக்கேன்.. முடிச்சுட்டு கூப்பிடறேன்.." என்றவன் அழைப்பை துண்டித்தான்...

"வா!!" என்பதுபோல அவள் வண்டியை கண்ணை காட்ட, இவளோ ஓடி போயி அவள் வண்டியில் ஏறி திரும்ப அவனை காணோம்.. மீண்டும் பின்னாடி அடித்த ஹாரனில் திரும்ப அவனோ முன்னே செல் என்றான்..

வெண்ணிலாவிற்கு முறைப்பு வந்தாலும் அவள் இயல் குணமே இது தான்.. டேக் இட் ஈசி பாலிஸி!!

முரளிதரன் சாந்தி தம்பதிகளின் தவபுதல்வி தான் நம் வெண்ணிலா.. இவர்கள் சொந்த ஊர் மதுரை.. அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம்.. மகளின் தேவைக்காக கடன் வாங்கி செய்துவிடும் தந்தை.. எல்லோருக்கும் அக்கா இரண்டாவது அன்னையாக அமைவது வரம் ஆனால் இங்கு அன்னையே தோழியாகவும், மூத்த அக்காவாகவும் அமைந்திருப்பது வெண்ணிலாவிற்கு மிகவும் வர பிரசாதமே!! எந்த விஷயத்தையும் மறைக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு இதுவரைக்கும் ஏற்பட்டதே இல்லை..

பிகாம் படிக்கும் பொழுது பேங்க் உத்தியோகம் கிடைக்க வெறும் ஒரு டிகிரியை வைத்துக் கொண்டு எப்படி பேங்கில் வேலை செய்வது என்று ஒரு வருடம் அதற்காக தனியாகவும் பேங்க் வேலை செய்துகொண்டு கரஸ்பாண்டில் படித்தவள்.. எந்த அளவுக்கு துரு துரு குறும்புகாறியோ அதே அளவிற்கு புத்திசாலியானவளும் திறமைசாலியும் கூட.. எடுத்த வேலை முடிக்காமல் ஓய மாட்டாள்..

படித்தது அத்தனையும் இருப்பாளரும் சேர்ந்து படிக்கும் பள்ளி, கல்லூரி தான்.. 'ஏண்டி இதுவரைக்கும் யாரையும் பிடிக்கலையா காதல் என்று சுத்தாமல் இருக்கிறாய்?' என்று கூட அன்னை கேட்டு விட்டார்.. ஆனால் 'எனக்கு சைட் அடிச்சோமா சந்தோஷமா இருக்கணும் மம்மி.. என் குணம் என்னன்னு உங்களுக்கு தெரியும் எனக்கு ஏற்ற ஒரு இளிச்சவாயன நீங்க பாக்க மாட்டீங்களா நான் எதுக்கு தனியா தன்னை தேடி கஷ்டப்படணும்?!' என்று கண்ணடிக்கும் மகளின் மீது அபரா நம்பிக்கை சாந்திக்கு..

'மதுரை அருகில் உள்ள திண்டுக்கல்லில் புகழ் பெற்ற தனியார் வங்கியில் தான் தனக்கு வேலை கிடைத்து இருக்கிறது நட்புகள் இருவரும் சேர்ந்து ஒன்றாக வீடு எடுத்து தங்கி சமைத்து சாப்பிட்டு நாங்கள் இருந்து கொள்கிறோம் எங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று தைரியமாகவும் அதேசமயம் நேர்மையாகவும் சொன்ன மகளின் பேச்சு பிடித்து போய் அவள் விருப்பத்திற்கு தான் இப்போது வரை விட்டு வைத்திருக்கிறார்கள் அந்த பெற்றோர்கள்..

வண்டியை ஓட்டிக்கொண்டு வெண்ணிலா அங்கும் இங்கும் பின்னாடி வருகிறானா? எங்கு செல்ல வேண்டும் என்று திரும்பிப் பார்த்துக் கொண்டே தெரு முழுதும் வண்டி ஓட்டுபவர்களிடமும், ரோட்டில் நடந்து செல்பவர்களிடமும் வசவு வாங்கிக் கொண்டு அவன் சென்று நின்ற பூங்காவிற்குள் இவளும் சென்றாள்..

"ப்ச்!! பார்க் போன்னு சொன்னா போயிருக்க மாட்டேனா?? திண்டுக்கல்ல நாலு ரவுண்ட் அடிக்க விட்டுட்டான் சிடுவன்.."

வண்டியை நிப்பாட்டிவிட்டு அமர காலி பெஞ்ஜ் தேடி இவன் அழைய, "ஏன் கீழ உக்காந்தா ஆகாதாம்மா?? பேங்க்ல மேனேஜரா இருந்தா உய்யாரமா தான் உக்காரணுமா?? புல்வெளி எவ்வளவு அழகா இருக்கு இதுல அப்படியே உட்கார்ந்தா உடம்பு உஷ்ணம் எல்லாம் இறங்கி எவ்ளோ பிளசண்டா இருக்கும் ரசனை கெட்டவன்.." என்றவள் அவன் பின்னால் செல்ல அங்கு ஒரு காதலர்கள் கையை கோர்த்துக்கொண்டு கதை பேசி கொண்டிருக்க, இவனோ சற்று இடைவெளியில் போயி அமர, அவர்கள் தனிமை தேடி இவனை முறைத்துக்கொண்டே நகர்ந்து விட்டார்கள்..

வெண்ணிலா தலையில் அடித்துக்கொண்டு அவன் அருகில் சென்றாள்.. அதற்குள் மீண்டும் மீண்டும் சாரு பப்பூ என்ற அழைப்பில் இவள் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக போய் கொண்டிருந்தது..

"பப்பூ!! நம்ம வேலையா தான்டா வந்திருக்கேன்.. அழாம இரு டா.. என் தங்க பப்பூ சாப்டாளா??"

"போன வைக்குறீங்களா மிஸ்டர்ர்ர்ர்..!!"

கத்தியே விட்டாள் வெண்ணிலா.. அருகில் இருப்பவர்கள் தங்களையே பார்ப்பதை உணர்ந்து அவன் அருகில் அமர்ந்தவள், "உங்களுக்கு ஹெல்ப் பண்ண தான் நான் இங்க வந்துருக்கேன்.. சும்மா போன்ல கொஞ்சி பேசிட்டு இருக்கீங்க?? எங்களுக்கு குடும்பம் இல்லையா?? எங்க வீட்ல தேட மாட்டாங்களா?? உங்க பின்னாடியே நான் வந்து கிட்டு இருக்கேன் என்ன கண்டுக்காம போன்ல மட்டும் கொஞ்சம் கொஞ்சி பேசிட்டு இருக்கீங்க??"

காட்டமாக தான் பேசினாள்.. இவளுக்கு அவன் தன்னை கண்டுக்காதது கோபமா இல்லை யாரோ ஒரு பெண்ணுடன் மட்டும் கொஞ்சி பேசுவது கோபமா அவளே அறிவாள்..

"என்ன பேசணும்??"

"ப்ச்!! ஏன் உங்க அம்மா உங்களோட லவ்வுக்கு அக்சப்ட் பண்ணல அதுக்காக எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க இப்போ என்னோட ரோல் இதுல என்ன??"

தன் கதையை கூற ஆரம்பித்தான் நித்திக் சரண்!!,

மதுரையை பூர்வீகமாக கொண்டவர்கள் தான் நித்திக் பரம்பரை.. நித்திக் தாத்தாவிற்கு யசோதா, சந்திரமோகன் என்று இரு பிள்ளைகள்.. ஜாதிய வாதி, குடும்ப பெருமை பேசுபவர்.. தாத்தா தன் உடன் பிறந்தவர்களுடன் கூட்டு குடும்பமாக அந்த அரண்மனை வீட்டில் வாழ்ந்தார். யோசதா தன் சொந்த மாமன் மகனையே காதலிக்க நித்திக் தாத்தா, 'பொண்ண பெத்தா இப்புடி பெக்கணும் டா.. சொத்து வெளில போகாம காதலிச்சிருக்கா பாரு!' என்று நரைத்த மீசையை முறுக்கி ஊரே மெச்ச திருமணம் செய்து வைத்தார்..

சிறுவயதிலிருந்து தான் பார்த்த மாமன் மகன், தான் பழகி காதலித்தவனையே கை பிடித்த சந்தோஷத்தில் இந்த உலகத்திலே தான் அதிர்ஷ்டசாலி என்று இருமாப்பில் சுற்றி வந்த யசோதாவிற்கு விரைவாக கருவும் தங்கியது.. அவள் அடைந்த மகிழ்ச்சிக்கும், குடும்பம் அவளை கொண்டாடியதற்கும் அளவே இல்லாமல் போனது..

ஆனால் அது அத்தனையும் சிறிது மாதங்களில் வடிந்துவிட்டது. ஆம் நல்ல முறையில் சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.. ஜெமின் சொத்தை பாதுகாக்க வாரிசு பிறந்து விட்டான் என்று அனைவரும் ஆர்ப்பரிக்க அப்போது தான் மருத்துவச்சி மெலிதாக விசியம் கூறினார்..

"அய்யா உங்க பேரன் காலு கொஞ்சம் உச்சமா தான் இருக்கு.."

"எலேய்!! என்ன பேசுதவ??" ஆக்ரோசமாக கத்தியவர் பேரனை தூக்கி பார்க்க, ஒரு கால் நேராகவும் ஒரு கால் பாதம் மட்டும் கூம்பி சற்று திரும்பி இருந்தது.. எல்லாரும் போல இயல்பாக அவன் நடை இருக்காது என்றும் கூறிவிட்டார்..

"அரண்மனை வாரிசா கெத்தா ஆண் சிங்கம் பிறந்திருக்குன்னு நினைச்சா இப்படி நொண்டியா, முடமா பிறந்திருக்கு.. இது வளர்ந்து நாளைக்கு இந்த மக்கள்கிட்ட பேச்சு வாங்குறதுக்கு இல்லாமலே போகலாம் அத கொன்னுடுங்க.. "

ஈவு இரக்கம் பார்க்காமல் பேசிய தாத்தா இவராகத்தான் இருப்பார் அதற்கும் ஒரு ஆப்பு அமைந்தது..

"அது ஐயா உங்க மகளோட கர்ப்பப்பை ரொம்பவே புண்ணாகி இருக்கு.. இந்த ஒரு குழந்தையை தாங்கினதே பெரிய விஷயம்.. அதுபோக சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணதுனால தான் இந்த குழந்தை இப்படி பிறந்தது.. அடுத்ததா பிறக்கிற குழந்தையும் ஆரோக்கியமா நல்லபடியா பிறக்குகிறதுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை ஒரு வேலை உங்க மகள் உயிருக்கே கூட அது ஆபத்த முடியலாம் நீங்க யோசிச்சு முடிவு சொல்லுங்கய்யா.. "

என்ற மருத்துவச்சியோ தன் கடமை முடிந்தது என்று வெளியே சென்று விட்டார்.. மிகுந்த யோசனையிலிருந்த தாத்தாவிற்கு வேறு வழியே இல்லை தன்னிடம் இருக்கும் பணம் செல்வாக்கைக் கொட்டி வைத்தாவது எப்படியும் இதை சரிபடுத்திக் கொள்ளலாம் என்று மனதை சமாதானப் படுத்தி கொண்டார்..

ஒரு கட்டத்திற்கு மேல் இதுதான் தன் பேரன் என்று மனதை தேற்றி கொன்றவர் ஊரைக் கூட்டி வெகு விமர்சையாக அரண்மனையில் பேரனின் நோஞ்ச கால் தெரியாத அளவிற்கு காலுக்கு உறைகள் மாட்டி தன் பேரனுக்கு "நித்திக் சரண்" என்ற பெயரும் சூட்டினார்..

சுவாரசியமாக கதையை கேட்டுக் கொண்டிருந்தவள் அந்த பெயர் சூட்டு விழாவில் இவன் கூறிய பெயரைக் கேட்டு அதிர்ச்சியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. நித்திக் தன் காலில் இருக்கும் ஷூவை கழட்டி தன் காலின் குறையை அவளுக்கு காட்டினான்..

ஒருமுறை வங்கியில் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வெகு விமர்சியாக கொண்டாட, பூஜை முடிந்து தட்டு சூடத்தை ஏந்திக்கொண்டு நித்திக்கிடம் பூசாரி செல்ல எல்லோரும் தங்கள் காலனியை கழட்டி விட்டு திருநீரை எடுத்து நெற்றியில் வைத்துக்கொள்ள, இவன் மட்டுமே காலனி கலட்டாமல் அப்படியே எடுத்து பூசிக் கொண்டான்..

அப்போது இவளுக்கு வெறுப்பாகவும் கசப்பாகவும் தான் இருந்தது. 'பெரிய ஃபாரினர் ஷூ இல்லாம இருக்க மாட்டானா?' என்று அன்று வம்பு பேசிய வாய்கள் இன்று ஊமையாக அந்த உச்சமான காலையே வெறித்து பார்த்தது..
 
Last edited:
Top Bottom