• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புது மங்கல சௌபாக்கியம் - 5

நிதனிபிரபு

Administrator
Staff member


அத்தியாயம் 5


"ஹே லாவண்யா!! என்ன இன்னும் வேலைக்கு கிளம்பாம இருக்க??"

யசோதா, நித்திக்கை போய் ஹாஸ்டலில் பார்த்து வருகிறேன் என்று கூறிவிட்டு வாசல் வரை செல்ல சந்திரமோகனின் உறக்க குரலில் நின்று திரும்பி பார்த்தார்.. அவர்கள் அறையிலிருந்து லாவண்யா மெல்ல நடந்து வந்தாள்.. நிமிர்ந்து புருஷன் முகத்தை பார்க்க அவர் ஏதோ கண்ணாலேயே ஏதாவது சமாளி என்று கெஞ்ச, பிள்ளையோ விட்டால் கதறி விடுவேன் என்று முகத்தை வைத்துக்கொண்டு இருந்தாள்..

"அது இன்னைக்கு வளர்பிறை சஷ்டிங்க நான் முருகன் கோயில் போயி தானேங்க விரதம் முடிப்பேன்.."

"என்ன விளையாடுறியா டி?? லோ பிபி வச்சுட்டு உன்னை விரதமே இருக்காதன்னு சொன்னா இப்படி சாப்பிடாம கொள்ளாம கோயிலுக்கு போறேங்குற போற வழியிலையே மயங்கி விழுந்துட்டின்னா உன்னை யாரு பார்க்கிறது??. "

"நித்திக்காக ஆரம்பிச்ச விரதங்க.. ஏனோ எனக்கு அதை நிப்பாட்டவே தோண மாட்டேங்குது ஒன்னும் ஆகாது பயப்படாதீங்க அதான் கையில போன் இருக்குல்ல.. "

"டேய் சந்திரா!! நீ ஏன்டா அவளை கத்திக்கிட்டு இருக்க?? நான் அவ கூட துணைக்கு கோயிலுக்கு போயிட்டு வரேன்.. நீ முடிஞ்சா ஸ்கூல் வேலை முடிச்சுட்டு ஒரு எட்டு போய் அவனை பார்த்துட்டு வா இல்லன்னா அடுத்த வாரமே பாத்துக்குவோம். "

என்றதும் சந்திரமோகன் சாருலதாவும் பெருமூச்சு விட அவர்களை அக்கினி பார்வையில் முறைத்துக் கொண்டு நின்றாள் லாவண்யா..

லாவண்யாவும் யசோதாவும் கோயிலுக்கு கிளம்பு ஆட்டோ கூப்பிடுவதற்காக யசோதா அங்கிருந்து நகர அடுத்த நொடி வேகமாக வந்து சந்திரமோகனின் அருகில் நின்ற லாவண்யா,

"இங்க பாருங்க நீங்க கொடுக்குற தைரியத்துல தான் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கேன். அண்ணி எதிர்த்து எனக்கு பண்ற எதிலும் இஷ்டமே இல்ல.. அவங்க நாளைக்கு வருத்தப்படுற மாதிரியோ இல்ல தேவையில்லாம என் புள்ள ஆசைய வளத்துக்கிட்டு கஷ்டப்படுற மாதிரியே நடந்துச்சு உங்களை சும்மா விடமாட்டேன் பாத்துக்கோங்க. "

என்றவள் கிளம்பிவிட்டாள்.. லாவண்யாவிற்கும் நித்திக்கை ரொம்பவே பிடிக்கும் இப்படி ஒரு மருமகன் வந்தால் வேண்டாம் என்று சொல்லவா தோன்றும் ஆனால் கூடவே இருக்கும் அண்ணிக்கு எதிராக செய்ய அவளுக்கு விருப்பமில்லை அதையும் தாண்டி தன் மகள் மனதில் முழுக்க ஆசை ஏறிய பிறகு அண்ணி ஒப்புக்கொள்ளவில்லை என்றால் பிள்ளை தவித்து போய்விடும் அல்லவா.. அவளும் காதலித்தவள் தானே இவனை திருமணம் செய்யக்கூடாது என்று பெற்றவர்கள் மிரட்ட அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசான லாவண்யா நீங்களாவது உங்கள் சொத்தாவுது எனக்கு சந்திரமோகன் தான் வேணும் என்று கரம் பிடித்தவள் ஆயிற்றே, தன் மகளும் அப்படி துணிந்து கரம் பிடித்தாள் என்றால் சந்தோஷம் ஆனால் முடியாமல் போனால் அந்த காதல் தரும் வலி அவளால் தாங்கிக் கொள்ளத்தான் முடியுமா??

" பாப்பா ஒரு அப்பாவா உனக்கு இந்த விஷயத்தை நான் சொல்லக்கூடாது ஆனாலும் எனக்கு மாப்பிள்ளை மேல் இருக்க நம்பிக்கையில சொல்றேன். உனக்கு என்ன வேணுமோ அதுக்காக அடம் பிடித்து, போராட தெரியணும்.. இப்படி அழுது உக்காந்துட்டு இருக்கிறதுனால எதுவும் உன் கைக்கு வந்து சேராது. "

என்றவர் மகள் கண்ணை துடைத்துவிட்டு நித்திக் கல்லூரிக்கு கூட்டி சென்றார்..

"வாங்க மாமா ஏன் லேட்??"

"எங்க அக்காவ சமாளிச்சு வர நேரம் ஆச்சு டா..."

"மம் சாப்பிட்டீங்களா?? என்ன சாப்டிங்க?? தோசைக்கு தொட்டுக்க தக்காளி சட்னியா??" என்பது வரை கேட்டுக்கொண்டே இருந்த நித்திக் பார்வையோ இமை தட்டாமல் தன் மாமன் மகள் மீது நிலைத்திருந்தது..

நித்திக் கேட்ட எந்த கேள்விக்கும் சந்திரமோகன் ஒழுங்காக பதில் சொல்லவே இல்லை.. அதை கவனிக்காமல் ம்ம்ம்ம் கொட்டிக் கொண்டே வேறு வேறு கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்த மாப்பிள்ளையை பார்த்தவன் மானசிகமாக தலையில் அடித்துக் கொண்டு, "நீங்க பேசிட்டு இருங்க நான் வெளியில ஒரு வேலையா போயிட்டு வந்துடறேன்.." என்றவர் நாகரிகமாக நகர்ந்து கொண்டார்..

"பப்பூ!!"

"ம்ம்ம்ம்!!"

"தாவணில ரொம்ப அழகா இருக்க டி."

உடல் கூச தாவணி முனையை திருகிக்கொண்டே நிமிர்ந்து பார்க்காமல் இருந்தாள் . அவள் உயரத்திற்கு இவனும் குனிந்து கொண்டே போக அவளோ நிலத்தில் முகத்தை புதைத்து விடுபவள் போல் இன்னும் இன்னும் தலையை கீழ்நோக்கி வளைந்து கொண்டே போனாள்..

"ஹலோ மாமன் பொண்ணே உங்கள பாக்குறதுக்காக தான் சார் காலையிலிருந்து வெயிட்டிங்.. கொஞ்சம் கருண காட்டி உங்க அழகு முகத்தை காட்டுறது!"

"நீங்க இப்புடிலாம் பேசுனா.. நா.. நான்.. அப்பாகிட்ட போயிடுவேன்.."

கன்னம் சிவபேற பாதம் வரை கூசி சிலிர்க்க கூறினாள் சாரு லதா..

நித்திக் கல்லூரிக்கு கிழே ஒரு பூங்கா மாதிரியான இடம் அதில் தான் பெரும்பாலான விசிட்டர்ஸ் விடுதியில் தங்கும் தங்கள் பிள்ளைகளை பார்த்து பேசி விட்டு செல்வார்கள்.. இவர்களும் அங்கு தான் நின்றிருக்கிறார்கள்..

"சரி பப்பூ அப்போ படிப்பு பத்தி பேசலாமா?? நெஸ்ட் என்ன படிக்க போற??"

"அய்யய்யோ வேண்டாம்.."

என்றவள் சட்டென்று நிமிர்ந்து நித்திக் முகம் பார்க்க அவன் கண்களோ குறும்பில் மிளிர்ந்தது..

"ஹாஹா!! மாட்டுனியா இப்போ பாரு என் முகத்தை.." என்றவன் அவள் தாடையை கையில் தாங்கி முகத்தை நிமிர்த்தினான்.. கண்கள் மூடி அவன் தொடுக்கையில் கிறங்கி நின்றாள் சாரு..

"சாரு! மை பேபி! மை பப்பூ!! அவஸ்தையா இருக்கு டி இப்புடியே உன்ன கடத்திட்டு போயிடவா??"

"ம்ம்ம்ம்!!"

கண்ணை மூடி வெயில் பட்டு முகம் ஜொலிக்க பருவ இதழ்கள் துடிக்க தன் கைக்குள் நிற்கும் மாமன் மகளை முத்திட ஆசை கொண்டவன் அவள் இதழை நோக்கி குனிய,

"அய்யய்யோ ஸ்டாப்!!" என்று கத்தி தன் இருக்கையிருந்து எழுந்துவிட்டாள் வெண்ணிலா..

"வாட்!?" இன்றும் அதே மோனநிலையில் லயித்திருந்தவன் கனவை கலைக்கும் விதமாக கத்திய வெண்ணிலாவின் மேல் கோபமுற்ற நித்திக் அவளை முறைத்துப் பார்த்தான்..

'பொண்டாட்டி கிட்ட, எக்ஸ கிஸ் பண்ணத பத்தி சொல்றதே தப்பு.. இதுல சிடுவனுக்கு அதை தடுத்தேன்னு கோவம் வேறு வருதோ?!"

என்று மனதுக்குள் காயிந்தவள், ஏன் தன்னை அவன் பொண்டாட்டி என்று கூறிக்கொண்டோம் என்றே புரியவில்லை..

"அது முத்தக் காட்சி எதுவும் வருதுன்னா ட்ரிம் பண்ணிட்டு சொல்லுங்களேன்.. கேட்குறவங்களுக்கு கொஞ்சம் எம்பரிசிங்கா இருக்குமேன்னு ஸ்டாப் பண்ண சொன்னேன்.. "

"அதெல்லாம் ஒன்னும் நடக்கல.. ஆல்ரெடி நந்தி மாதிரி என் மாமன் வந்துட்டான். "

"ஹாப்பா நல்லது!!"

"என்னது.."

"ஒன்னுல ஒன்னுல நீங்க சொல்லுங்க.."

மீண்டும் தன் காதல் க(வி)தையை கூற ஆரம்பித்தான்..

"ஹ்க்கும்!!" இருமல் சத்தம் கேட்டு பதறி சாரு விலகி நிற்க, நித்திக் தரையில் காலால் உதைத்தான் கரடி என்று திட்டிக்கொண்டே..

"மாப்பு!! உனக்கு ஜூஸ் வாங்கிட்டு வந்தேன் டா.."

"எனக்கு பிரெஷ் ஜூஸ் தான் வேணும்!!" என்றவன் பார்வை சாரு இதழில் இருக்க,

"டேய்ய் நான் அவ அப்பன்டா."

"அழகான பொண்ணுங்களுக்கெல்லாம் ஏன் அப்பனுங்க இருக்கானுங்களோ?" என்று தலையை கோதிகொண்டு அங்கும் இங்கும் பார்க்க இவளோ கையிலிருக்கும் ஜூசை பருக மறந்து தன் மாமனை கண்ணாலே பருகினாள்..

'சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும் இல்லேன்னா இவனே நம்மள போட்டு தள்ளிடுவான் போல!!' என்று வெகுவாக யோசித்தவர், "பாப்பா காலையிலிருந்து வெறும் வயிரா கிடக்கிற இந்த ஜூஸையாவது குடிடா."

"இல்ல வேண்டாம் ப்பா!!"

"ஹே வெயிட்!! மணி என்ன ஆகுது இன்னும் சாப்பிடலன்னு சொல்லிட்டு இருக்கீங்க என்ன ஆச்சு ஏன் சாப்பிடாம இருக்க பப்பூ.. "

"இல்ல.." அவள் தயங்க,

"அந்த கொடுமையை ஏன் கேக்குற?? சஷ்டிக்கு விரதம் இருந்தா ஆசைப்பட்டவனையே கல்யாணம் பண்ணிக்கலாம், நெனச்சதெல்லாம் நடக்கும்னு எந்த கூமுட்டை சொல்லுச்சோ.. இவளும் சீக்கிரமே உங்களுக்கு கல்யாணம் நடக்கணும் அதுவும் அக்கா சமாதாத்தோடன்னு விரதம் இருக்குறா.. "

என்றதும் அவன் கண்கள் கலங்க சாருவை பார்க்க அவளோ காதல் பொங்க மாமனை பார்த்தாள்..

"ஏன்டா பப்பூ இப்புடி!! யாரு சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் நான் உன்னை தான் டி கல்யாணம் பண்ணிக்குவேன். அதுக்கு எனக்கு மத்தவங்களோட சம்மதம் அவசியமே இல்லை. இந்த குட்டி தொப்பையை கஷ்டப்படுத்தாத டி பப்பூ."

என்றவன் தாவணிக்கு மேலேயே அவள் வயிரை தடவி விட கூச்சம் கொண்டு நித்திக் தோளில் முகம் புதைத்தாள் .. இதை பார்த்த சந்திரமோகன் வேகமாக தலையை திருப்பி கொண்டார் வேறு பக்கம்..

'ஆண்டவா!! இதுங்க கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே பிள்ளைய பெத்து எங்க அக்காகிட்ட எனக்கு செருப்படி வாங்கி வைக்குங்க போலயே முதல்ல இடத்தை காலி பண்ணுவோம்..'

என்று முணுமுணுத்தவர், " பாப்பா ரெண்டு பேரும் ஜூஸ் குடிச்சீங்கன்னா கிளம்பலாம் அக்காகிட்ட மார்க்சீட் வாங்கிட்டு வரேன்னு சொல்லி இருக்கேன் வாங்காம போனா அவ கேள்வி கேப்பா அதனால ஸ்கூலுக்கு போய் வாங்கிட்டு போறதுக்கு நேரம் சரியாக இருக்கும். "

சந்திரமோகன் கூற அந்த பழச்சாறு கூட பாறையாக தொண்டையில் இறங்கியது காதல் கிளிகளுக்கு.. கண்ணீர் மல்க பிரியா விடை குடுத்து அங்கிருந்து கிளம்பி கையோடு சாருலதா பள்ளிக்குச் சென்று மார்க் சீட் வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் வந்தார்கள்..

"என்னங்க புள்ள காலையில போயிட்டு வந்ததிலிருந்து மந்திருச்சு விட்ட மாதிரி ஏதோ யோசனைலையே இருக்கா?? "

"இதுக்கு பேர் தான் டி பசலை நோய்!! ஏன் உனக்கு தெரியாதா??"

"என்னது நோயா??"

"அடியே மக்கு பொண்டாட்டி!! காலேஜ் ரெண்டு நாள் லீவு விட்டா வெள்ளிக்கிழமை சாயந்திரம் என் சட்டை புடிச்சுகிட்டு நெஞ்சில் சாய்ந்து என்னை போக விடாம ஒரு சித்திரவதை பண்ணுவல்ல திங்கட்கிழமை காலைல என் முகம் பார்க்கிற வரைக்கும் அதுக்கு பேருதான் பசலை நோய் உன் பொண்ணுக்கும் இப்ப அந்த நோய் தான் வந்திருக்கும் போல."

சந்திரமோகனை ஏற இறங்க பார்த்த லாவண்யா, "அவளுக்கு நீங்க அப்பா தானே??" நக்கலாக கேட்டாள்..

"இதுக்கே வா இதுங்க ரெண்டும் அடிச்ச கூத்த எல்லாம் பார்த்திருந்தா உண்மையாலுமே அந்த சந்தேகம் வந்திருக்கும்!"

"பயமா இருக்குங்க!!"

"என்னத்துக்கு டி பயப்புடறவ?? ஒன்னும் ஆகாது என் மாப்பிளை பாத்துக்குவான்.."

என்றவர்கள் நிம்மதியாக உறங்க, இவர்களை உறங்க விடாமல் விதி சதி செய்ய காத்திருக்கிறது!!
 
Last edited:
Top Bottom