புனர்ஜென்மம் 9
அந்தப் பெண் அர்ஜுனை ஆர்வமாகப் பார்ப்பது, அவனுக்கும் தெரிந்தது. ஆனால் ஏனோ கடுப்பாக இருந்தது.
இப்படி பார்த்துப் பார்த்து தான் தன்னை ஒருத்தி குப்புற தள்ளி விட்டு சென்று விட்டாள். மீண்டும் ஒன்றா?? நெவர், நோ, லேது, நெகி என்று எல்லா மொழிகளிலும் அந்த வார்த்தை வந்து சென்றது.
ஏனோ காதல் என்ற ஒன்று எட்டி காயாக கசந்து போனது அவனுக்கு. இனி தனக்கு காதலும் வேண்டாம் பெண்களும் வேண்டாம். தனி மரமாக இருந்து விடலாம் என்று முடிவை எடுத்து விட்டான். அவன் வாழ்க்கையில் வசந்தம் வருமா?? பெண் என்பவள் அவன் வாழ்க்கையில் வருவாளா, வரமாட்டாளா?? அதை காலம் தான் முடிவு செய்யும்.
(எட்டிக்காய் இது எட்டி மரத்திலிருந்து வரும் காய். மிகுந்த கசப்பான தன்மையுடையது. இதன் பழம், பூ, பட்டை இலை என்று எல்லாமே கசப்பாக இருக்கும். ஆனால் மருந்திற்காக பயன்படும் ஒன்று)
…….
காக்களூர் (Kakkalur) அழகான பசுமையான கிராமம். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று இருந்தது. நன்றாக வளர்ச்சியடைந்தது போல வீடுகளும் விஸ்தாரமாக இருந்தது.
ரயில் நிலையத்திற்கு அவர்கள் வீட்டில் இருந்து, இவர்களை அழைத்து செல்வதற்காக வந்திருந்தார் பிரசாத். ராகேஷின் அண்ணன், பெரியப்பாவின் மூத்த பிள்ளை.
அவர்கள் ரயிலில் இருந்து இறங்கும்போதே, பிரசாத் யாருடனோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. இவ்வளவு காலையில் ரயில் நிலையத்தில் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று கவனித்தான் ராகேஷ்.
ராகேஷுக்கு தான் நிரோஷாவின் தந்தையை தெரியவில்லை, ஆனால் பிரசாத்திற்கு தெரிந்திருந்தது.
அவர்கள் சகஜமாக பேசுவதே நன்றாக பழக்கம் இருக்கிறது என்பதையும் காட்டியிருந்தது.
நிரோஷா இன்னுமே அவனை ஓரப்பார்வை, திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டிருக்க. கடுப்பாக இருந்தது அர்ஜுனுக்கு. அவன் கண்டு கொள்ளாமல் தான்யதாவுடன் பேசிக்கொண்டே இருந்தான்.
ஆனால் நிரோஷாவின் பார்வையை ஆராதனா புரிந்தே வைத்திருந்தாள். நமட்டு சிரிப்புடன் கணவனை பார்ப்பது போல கவனித்து கொண்டிருந்தாள்.
ராகேஷ், தன் மைத்துனனை மனைவிக்கு சுட்டிக்காட்டினான்.
பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு, அவரவர்கள் தங்களுக்காக வந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தனர்.
“வயசு பொண்ண இந்த நேரத்துல டூவீலர்ல கூட்டிட்டு போறதை விட, எங்க கூட காருல அனுப்பிடுங்களேன். பக்கத்து பக்கத்து வீடுன்னு சொல்றீங்க?? ஒரே இடத்துக்கு தானே போக போறோம்??” என்றாள் ஆராதனா.
‘தன் தமக்கைக்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை?’ என்று நினைத்தாலும், வாயை திறக்கவில்லை அவன்.
“ஆனா கார்ல இடம் இல்லையேம்மா?” என்று ராகேஷ் கூற.
“நீங்க இறங்கி அவர் கூட டூவீலரில் வாங்க. அப்படி இல்லன்னா, நம்ம அர்ஜுனை வரச் சொல்லலாம்” என்று சாதாரணமாக கூறினாள்.
இப்பொழுது வெளிப்படையாக அவன் திரும்பி தன் தமக்கையை முறைத்தான்.
“பக்கத்து பக்கத்து வீடு, தெரிஞ்சவங்க வேற, நாம உதவி பண்ணலனா எப்படி?? ஏதாவது ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டால், மனசு வருத்தமா இருக்கும் இல்லையா??” என்றாள் ஆராதனா.
ராகேஷ் கதவை திறக்க போக, “மாமா நீங்க இருங்க. நானே டூவீலர்ல போறேன். ரொம்ப இருட்டா இருக்கு. கிராமத்து சைடு வேற” என்று கூறியவன். தமக்கையிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அமைதியாக சென்று இருசக்கர வாகனத்தின் அருகில் நின்றான்.
அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே ‘தேங்க்ஸ்’ சொல்லிவிட்டு நிரோஷா வந்து காரில் ஏறிக்கொண்டாள்.
ராகேஷ் முன்னிருக்கையில் தன் சகோதரனுடன் அமர்ந்திருக்க, பின்னால் தானியதாவும் அமர்ந்து கொள்ள, அவன் யாரோ முகம் தெரியாத ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தான்.
ஆனால் மனதினுள் அந்த மனிதரை திட்டிக்கொண்டே, ‘வயசு பொண்ண கூப்பிட வர்றவரு அதுக்கு ஏத்த மாதிரி பொறுப்பா வண்டியை எடுத்துட்டு வந்திருக்கணும்?’ என்று.
ஆனால் அவர்கள் ஊரைப் பற்றி அவருக்கு தெரியும். பாதுகாப்பு மிக்கது தான். ராகேஷின் உறவினர்கள் அழைத்ததனால், மறுக்க மனமில்லாமல் பெண்ணை அவர்களுடன் அனுப்பி வைத்தார்.
“ரொம்ப தேங்க்ஸ் தம்பி” என்றார் அவர்.
“பரவாயில்லைங்க” என்று அமைதியாக இருந்து விட்டான்.
முகம் தெரியாதவர்களுடன் இரு சக்கர வாகனத்தில் போவது என்பது ஆண்களுக்கு பெரிய விஷயம் இல்லை. அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் ஆபத்து, தன் மாமனுக்கு ஏற்படாதா?? தனக்கு ஏற்பட்டால் கூட பரவாயில்லை. அவர்கள் குடும்பமாக நன்றாக இருக்க வேண்டும்’ என்று நினைத்தான் அர்ஜுன்.
அங்கிருந்து கிட்டத்தட்ட 1 ½ மணி நேரம் பயணத்தில் தான் அவர்கள் ஊருக்கு வந்துசேர்ந்தார்கள். பொழுது நன்றாக புலர்ந்துவிட்டிருந்தது.
பெரியவர்கள் எல்லாம், அவர்களை வாசலுக்கே வந்து வரவேற்றார்கள். “வாப்பா ராகேஷ் இப்பதான் ஊருக்கு வருவதற்கு வழி தெரிஞ்சுதா உனக்கு?” என்றார் ராகேஷின் பெரியப்பா ஸ்ரீனிவாசன்.
“இல்ல பெரியப்பா வேலை கொஞ்சம் அதிகமா இருந்தது” அவன் புருவத்தை நீவிக்கொண்டே கூறினான்.
“இது யாருப்பா உன் மச்சானா??” என்று சரியாகவே கணித்து கேட்டார் ஸ்ரீனிவாசன்.
அவர் காலில் விழுந்து பணிவாக வணங்கிய ஆராதனா. “எப்படி மாமா கரெக்டா கண்டுபிடிச்சீங்க?” என்று கேட்டாள்.
“தீர்க்க சுமங்கலியா இருமா” என்றவர். “அதுதான் முகத்திலேயே எழுதி ஒட்டி இருக்கேம்மா. ரெண்டு பேரும் லட்சணமா இருக்கீங்க. அக்கா தம்பின்னு பார்த்தாலே தெரியுது” என்றவர் கூறிய நொடி,
ஆராதனா கண்களை உருட்டி, அர்ஜுனையும் காலில் விழ சொன்னாள். ஆனால் அவனோ எதற்கு? என்று கேட்டான்.
மீண்டும் அவள் விழ சொல்ல, வேறு வழியில்லாமல் தமக்கை சொன்னதை செய்தான்.
“இந்த வருஷம் தனியா வர்ற நீ, அடுத்த வருஷம் உன் துணையோடு வரணும்” என்று
அர்ஜுனின் தலையையும் வருடி கொடுத்து ஆசீர்வதித்தார். அருகில் அவர் மனைவியும் இருந்ததால் அவரும் அதையே செய்தார். “ரொம்ப சந்தோஷமா இருக்கணும்பா” என்று வாழ்த்தினார்.
‘ரொம்ப அவசியம்?’ என்று மனதிற்குள் நொந்து கொண்டான் அர்ஜுன்.
திருவள்ளூர் மாவட்டம் கொஞ்சம் அனல் பறக்கும் மாவட்டம் தான். வேலூரை போல வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். என்னதான் இயற்கை வளம் அதிகமாக இருந்தாலும், விவசாயம் அதிகமாக அங்கு காணப்பட்டாலும், வெயிலில் உழைப்பவர்களின் நிறம் எப்படி இருக்குமோ அங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருந்தார்கள். தென் தமிழகத்திற்கான நிறங்கள்.
ஆனால் ராகேஷின் பெரியப்பா, தொட்டால் கண்ணில் மைத் தீட்டிக் கொள்ளும் அளவிற்கு கருமை நிறத்தோடு இருக்க. அவர்களுக்கு அர்ஜுனையும் ஆராதனாவையும் பார்க்கும்போது மிக அழகாக இருப்பதாகத்தான் தோன்றியது.
எப்பொழுதோ திருமணத்தின் போது பார்த்தது. அதன் பிறகு இப்போது தான் பார்க்கிறார்கள். அர்ஜுன் அப்பொழுது சிறு பையனாக இருந்தான். இப்பொழுது வளர்ந்து விட்டிருந்தான். இன்னும் ஆணழகனாக கம்பீரமாக காட்சியளித்தான்.
விருந்தோம்பல் எல்லாம் முடிந்து. அவர்களுக்கான அறைகளை காட்டி, தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வரச் சொன்னார்கள். பிறகு பெரிய வரவேற்பறையில் தரையில்தான் உணவு பரிமாறப்பட்டது.
வீடு பெரிதாக தான் இருந்தது. ஆனால் ஆடம்பரம் இல்லாமல் இருந்தது. வேலைப்பாடுகள் எல்லாம் மரத்தின் உபயத்தால் நன்றாகவே இருந்தது. பழங்காலத்து வீடு என்று பார்க்கும்போதே தெரிந்தது.
மொத்தத்தில் வழி வழியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வீடு எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது. அவ்வப்போது அதை புனரமைத்திருக்கிறார்கள் என்பது பார்க்கும் போதே அவனுக்கும் புரிந்தது.
அவனுக்கென்று தனி அறையை கொடுத்திருந்தார்கள். “பரவால்ல நல்லா வசதியா தான் இருக்கு வீடு” என்று அங்கலாய்த்தாள் ஆராதனா.
“நானும் எப்பயோ வந்தது. அப்பாவோட அங்க செட்டில் ஆயிட்டதனால, இங்க வர்றது குறைஞ்சிடுச்சு. ஆனா பெரியப்பாவும்- பெரியம்மாவும் நல்ல டைப். அப்பப்ப கூப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. ஸ்கூல் படிக்கிற காலத்துல, நானும் அப்பா கூட வந்து போயிட்டு தான் இருந்தேன். ஆனா காலேஜ் போனதுக்கப்புறம் எல்லாமே மாறிடுச்சு” என்று கூறினான் ராகேஷ். (அவளோடு சுற்றவே நேரம் சரியாக இருந்தால், எப்படி அவனால் ஊருக்கு வந்து செல்ல முடியும்?)
உணவுவேளை நன்றாகவே சென்றது. அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று, கோழி அடித்து குழம்பு வைத்திருந்தார்கள். ருசியும் அபாரமாக இருந்தது. அதுபோல ஒரு ருசியை அவன் இதுவரையில் சாப்பிட்டதே இல்லை. அவ்வளவு அற்புதமான ருசி.