புனர்ஜென்மம் 3
காதலிக்கும் போது எத்தனையோ நாட்கள் அவள் வரவிற்காகக் காத்துக் கொண்டிருந்த வாசல்.
பாக்யராஜைப் போல சைக்கிளில் சுத்தாமல், இருசக்கர வாகனத்தில் சுத்திக் கொண்டே அவளை எதிர்நோக்கி இருந்த தெரு.
அத்தனை வருடங்களும் மலர்ச்சோலையாகக் காட்சியளித்த அந்த இடம். இப்பொழுது மயானமாகத் தோன்றியது அர்ஜுனுக்கு.
“ஏய் வெளியே வாடி மேனா மினுக்கி” என்று கத்தினான்.
அரை மணி நேரமாக கத்திக் கொண்டுதான் இருக்கிறான். அவள் வீட்டில் தான் இருக்கிறாள் என்பதை அவளுடைய ஸ்கூட்டி அவனுக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது. ஆனால் வீட்டைத் திறப்பதாக தெரியவில்லை.
காவல் வாகனத்தின் சைரன் (Siren) ஒலி கேட்க ஆரம்பித்தது. ஆனால் அதைக் கூடப் பொருட்படுத்தாமல் அவன் கத்திக் கொண்டிருந்தான்.
அவன் இருபக்கமும் காவலர்கள் வந்து அவன் இரு கரங்களைப் பிடிக்கும் வரையில் அவன் நிதானம் அடைந்திருக்கவில்லை. பிறகுதான் துணுக்குற்று திரும்பிப் பார்த்தான்.
“மிஸ்டர், நியூசன்ஸ் கேஸாக்கிக்கிட்டு இருக்கீங்க” என்றார் காவல் அதிகாரி.
“லவ் பண்ணி ஏமாத்திட்டாள் சார். இப்ப அப்பா சாகுறாரு, அம்மா சாகுறாங்கன்னு சொல்லி என் தலையில மிளகாய் அரைச்சிட்டு போயிட்டாள் சார். பாருங்க நாய் மாதிரி வாசல்ல நின்னு கத்திக்க்கிட்டே இருக்கேன், எட்டிக் கிட்டிப் பார்த்தாளா பாருங்க? கல்நெஞ்சகாரி சார் அவள். உங்களுக்கு மட்டும் போனை பண்ணி வரவச்சிருக்காங்க?? எவ்வளவு கிரிமினல் சார் இவங்கல்லாம்?? நான் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் சார். அந்த பொண்ணை அரெஸ்ட் பண்ணீ, தூக்கி ஜெயில்ல போடுங்க சார்” என்றவன். குடித்திருக்கிறான் என்று நன்றாகவே தெரிந்தது காவலர்களுக்கு.
“இதுபோல எல்லார் வாழ்க்கையிலும் ஒரு கேஸ் இருக்கும்பா. இதெல்லாம் இப்ப சர்வ சாதாரணமாயிடுச்சு. அதுக்காக எல்லாம் அரெஸ்ட் பண்ண முடியாதுப்பா. அந்தப் பொண்ணு மேஜர்; அந்த பொண்ணுக்கு பிடிக்கலைனா நீ வற்புறுத்த முடியாது. அப்படித்தான் சட்டம் சொல்லுது. அதுவும் அவங்க வீட்டு வாசல்ல நின்னு, இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கறது சரி கிடையாது. இதுக்கு பேரு நியூசன்ஸ் கேஸ். புரிஞ்சுகிட்டு கிளம்பு. அப்படி இல்லன்னா உன்னை அரெஸ்ட் பண்ண வேண்டியதா இருக்கும்” என்று அந்த மனிதரும் பொறுமையாகத்தான் கூறினார்.
அவர் வாழ்க்கையிலும் அவனைப் போல அனுபவங்களை கடந்து தான் வந்திருந்தார். அதனால் அவனுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்க எண்ணினார் போலும்??
ஆனால் அவன் உடலில் சென்றிருக்கும் (மதுவின்) மருந்தின் வீரியம் அதைக் கேட்க மறுத்துக்கொண்டிருந்தது.
அவன் நிதானத்தில் இருந்திருந்தால்கூட உஷாராக இருந்திருப்பான், ஆனால் நிதானம் தவறி, ரௌத்திரத்தின் எல்லையில் இருந்தவன். காவலர்களையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் சொன்னதையும் சட்டை செய்யவில்லை. விளைவு? சட்டம் தன் கடமையை செய்தது.
ஆனால் எஃப்.ஐ.ஆர். (FIR) எல்லாம் போடவில்லை. அழைத்து வந்து போலீஸ் ஸ்டேஷனில் அமர வைத்தனர். அவனுடைய அலைபேசி மூலமாகவே அவன் தந்தையை வரவழைத்தனர்.
அடித்துப் பிடித்து வந்தார் ராஜேந்திர பிரசாத். அவருக்கு என்று அந்த இடத்தில் ஒரு பெரிய மதிப்பு இருந்தது. அதை தன் மகன் கெடுத்து விட்டதாகவே எண்ணினார்.
இனிமேல் இதுபோல நடக்காது. தன் மகனின் பொறுப்பு தனது என்று கையெழுத்திட்டு, மகனை அழைத்து வந்து, தன் மனைவியிடம் ஒப்படைத்தார்.
“என்ன புள்ளைய வளர்த்து வச்சிருக்க?? என்னை அசிங்கப்படுத்திட்டான். போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிக்க வச்சிட்டான். இந்த வயசுல என்ன காதல் வேண்டிக்கிடக்கு?? வாழ்க்கையில முன்னேறதுக்கு முன்னாடி இவங்களுக்கெல்லாம் காதல் வந்துடுது?? இன்னொரு வாட்டி அந்தப் பொண்ணு வீட்டு முன்னாடி போய் நின்னு, என்னை அசிங்கப்படுத்தினேனா அவ்வளவுதான்?? நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்று மனைவியையும் மகனையும் கண்டித்து விட்டு வெளிநடப்பு செய்திருந்தார்.
அவ்வளவு போதையிலும் அவர் பேசியது எல்லாம் அவனுக்கு தெளிவாகவே புரிந்தது. அவர் அப்படி சென்றதும் தாய் அவனைக் கட்டிக் கொண்டு அழுதார். பிதற்றினார்.
“என்னவாம் உங்க புருஷனுக்கு?? இந்த வயசுல காதலிக்காம வேற எந்த வயசுல காதலிப்பாங்களாம்?? முன்னேற்றத்துக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?” என்று கேட்டான் அர்ஜுன்.
அவர் அவனை முறைத்தார். அவன் முகத்தை சுருக்கிக் கொண்டு தன் காதல் தோல்வியில் பிதற்ற ஆரம்பித்து விட்டான்.
அளவுக்கு அதிகமான போதை அவன் உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாமல் போக. நடு வீட்டிலேயே வயிற்றில் இருப்பதையெல்லாம் வெளியேற்றி இருந்தான். குடித்த காபியிலிருந்து அடித்த சரக்கு வரை எல்லாம் கலந்தடித்து வெளியில் வந்து அந்த இடத்தையே துர்நாற்றத்திற்கு உள்ளாகியது. நல்லவேளை அவன் தந்தை அப்பொழுது இல்லை.
லீலா, அவசரமாக தன் மகளுக்கு அழைப்பு விடுத்தார். சொற்ப நேரத்தில் அவளும் அங்கு வந்து சேர்ந்தாள்.
தாயும், தமக்கையும் சேர்ந்து அவனை சுத்தப்படுத்தி, பிறகு அந்த இடத்தையும் சுத்தப்படுத்தி ஓய்வதற்குள், போதும் போதும் என்று ஆகிவிட்டது.
……..
மறுநாள் காலையில் அவன் கண் விழித்து எழும்போது, உடைகள் மாற்றப்பட்டு இருப்பது தெரிய. தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அர்ஜுன்.
அவனைத் தேடி வந்தாள். அவனுடைய தமக்கை ஆராதனா.
தமக்கையின் அரவம் உணர்ந்தாலும், அவன் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை.
“ரொம்ப நல்லா இருக்கு. எப்பயோ சின்ன வயசுல உன்னை குளிப்பாட்டுனது. இப்ப இத்தனை பெரிய வயசுல. அந்த வாய்ப்பை எங்களுக்கு கொடுத்திருக்க?? அம்மா அதை சொல்லி சொல்லி அழுதுட்டே உன்னை குளிப்பாட்டுனாங்க. ஒரு வயசுக்கு மேல என் பையன், நானே குளிச்சுக்குறேன்னு தனியா போய் அடம் பிடிச்சு நின்னவன். இன்னைக்கு என்னை குளிப்பாட்ட வைக்கிறானு?? புலம்பிக்கிட்டே இருந்தாங்க. என்ன இது அர்ஜுன்?? உன் வயசுக்கு நீ செய்யுறது தவறுன்னு உனக்கு தோணலையா? அப்படி என்ன பொல்லாத காதல் வேண்டி இருக்கு?” என்று கேட்டது தான் தாமதம்.
எழுந்து சென்று தன் தமக்கையைக் கட்டிக்கொண்டவன். ஒரு பாடு அழுது தீர்த்தான். அவன் அழட்டும் என்று அமைதி காத்தாள் ஆராதனா.
“என்னை ஏமாத்திட்டாள் அக்கா. நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டாள். எவ்வளவு கூலா சொல்லிட்டு போனாள் தெரியுமா?? லவ் பண்ணும் போது அப்பா அம்மா எல்லாம் கண்ணுக்கு தெரியலையாம்?? அதுவும் நான் சும்மாதான் அக்கா இருந்தேன். அவளா தான் வந்து வாலண்டியரா காதலை (Voluntarily) சொன்னாள்? சுத்தி சுத்தி வந்தாள். இப்ப அவங்க சமூகம், இவங்க சமூகம்னு பேசுறாள். இவனுங்கள எல்லாம் தமிழ்நாட்டு உள்ள விட்டு இருக்கவே கூடாது. ஓட ஓட ராஜஸ்தானுக்கு துரத்தி அடிச்சிருக்கணும். இவள மாதிரி எத்தனை பேர் தமிழ்நாட்டு பையனுங்கள மயக்கி, காதல் விளையாட்டு விளையாடி, இப்படி விட்டுட்டு போறாளுங்கனு தெரியல??” என்றான் அர்ஜுன்.
இன்னும் என்னென்னமோ பிதற்றினான். அது குடிகாரனின் பிதற்றலாக அவளுக்கு தெரியவில்லை. ஆற்றாமையின் வெளிப்பாடாகத் தான் தோன்றியது. தான் ஒருவரால் நிராகரிக்கப்படுவது என்பது எத்தனை வலியை கொடுக்கும்?? தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம், அதுவும் காதலால் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்ற வலி எவ்வளவு கொடுமையானது?? அதனால்தான் அவனையும் மீறி இப்படி செயல்பட்டு இருக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.
சிறு குழந்தையாய் தமக்கையின் தோள் சாய்ந்து அழுபவனின் முதுகை தடவி கொடுத்தாள் ஆராதனா.
“என்னால சத்தியமா முடியல அக்கா?? அதுவும் கஃபேல என்ன சொன்னா தெரியுமா?? அரக்கண்ட்டா (Arrogant) பிஹேவ் பண்றேனாம்? இவள் வருவாளாம். காதலை சொல்லுவாளாம். ரெண்டு பேரும் சேர்ந்து சுத்துவோமாம். திடீர்னு ஒரு நாள் அவங்க அப்பா தற்கொலை பண்ணிக்கிறேன்னு சொல்லி, அவங்க கேஸ்ட்டுல ஒருத்தர தான் பண்ணிக்கணும்னு வந்து நிற்பாளாம். எங்கிருந்தாலும் வாழ்கனு சொல்லி நான் அட்சதை போட்டு வாழ்த்தி அனுப்பி வைக்கணுமாம். அவள் சந்தோஷமா கல்யாணம் பண்ணிப்பாளாம். நான் மூலையில கிடந்து சாகனுமாம்?? இது என்ன அக்கா நியாயம்?? தட்டிக் கேட்க கூடாதாம், தப்பு ஏன் பண்றேனு கேள்வி கேட்க கூடாதாம்?? அதை கேட்டதுக்கு, அரக்கண்ட்னு (Arrogant) சொல்லிட்டு ஓடி போயிட்டாள்” என்று பிதற்றினான்.
“சரி ரிலாக்ஸ், எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்” என்று ஆராதனா அவனை சமாதானப் படுத்தினாள்.
“நாய்க்கூட என்னை ஒப்பிட்டு பேசிட்டாள் அக்கா. அவள் என்னமோ என்னை குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாளாம். நான் என்னமோ ரோட்டுல??” என்று வார்த்தைகளை முடிக்காமல் பற்களை நற நறத்தான்.
அந்த வார்த்தையில் ஆராதனாவிற்கே கோபம் கொப்பளித்தது. எங்கிருந்தோ பிழைப்பு தேடி இங்கு வந்துவிட்டு. தன் தம்பியை நாய் என்று கூறுவாளா இவள்?? அவளுக்கே ஆத்திரம் எழுந்தது. ஆனால் இப்பொழுது தன் தம்பியை சமாதானப்படுத்துவது தானே முக்கியம்??
“என்ன பார்த்து தராதரம் தெரியாம பழகிட்டேன்னு சொன்னாக்கா?? இவள் என்னை கழட்டி விடுவாளாம். நான் அதைக் கேட்க கூடாதாம். அதை கேட்டதுக்கு என்ன சொன்னா தெரியுமா?? சிட்டுவேஷனை எல்லாம் புரிஞ்சுக்க தெரியாத, நீ எல்லாம் ஒரு மனுஷனானு கேக்குறாள்?” என்று மீண்டும் அவன் அழத் தொடங்கினான்.
அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்றே ஆராதனாவிற்கு தெரியவில்லை.
அதற்குள் அவன் தாயும் வர, இருவருமாக சேர்ந்து அவனை சமாதானப்படுத்தினார்கள்.
அவன் தாயின் மடியில் படுத்துக்கொண்டு மன்னிப்பு யாசித்தான். அவன் தலையை வருடிக்கொண்டே அவர் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தார்.
பிறகு அவனை சுத்தப்படுத்திக் கொண்டு வர சொல்லிவிட்டு. அவனுக்கான காலை உணவை எடுத்து வந்து மூவரும் அங்கேயே அமர்ந்து அவனுடன் சாப்பிட்டார்கள்.
ஏனோ அவனுக்கு உணவு கூட இறங்க மறுத்தது. முதல் முறையாக ரெஸ்டாரண்டில் அவன் நடந்து கொண்டது. அதை அடுத்து ரோட்டில் நின்று கத்தி, போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. அளவுக்கு அதிகமான போதை. தாய் தமக்கையின் முன்பு சிறு குழந்தையாக நின்றது. எல்லாம் அவனை அழுத்தத்திற்கு கொண்டு சென்றது.
ஆனால் தாயும் தமக்கையும் அவனுடனே அந்நாள் முழுவதும் நேரத்தை செலவழித்தார்கள்.
தாய் சென்ற பிறகு, ஆராதனா அவனிடம் தனிப்பட்ட முறையில் பேசினாள்.
“நான் வேணும்னா அவள் கிட்ட பேசி பார்க்கவாடா?? அவங்க அப்பா கிட்ட கூட நம்ம அப்பாவை விட்டு பேச சொல்லலாம்? இல்ல உங்க மாமாவ விட்டு பேச சொல்றேன்?” என்று பொறுமையாக கேட்டாள்.
“காதலைப் பிச்சை எடுக்க சொல்றீங்களா அக்கா?? எங்க காதல் மேல அவளுக்கே அக்கறை இல்ல, என்னை ஏமாத்தணும்னு முடிவு பண்ணி தான் மூணு மாசம் என்கிட்ட பேசாம இருந்திருக்கிறாள். என்ன அவாய்ட் பண்ணியிருக்காள். அது தெரியாம கூமுட்டை மாதிரி நான் இருந்திருக்கேன். அவங்க அப்பா சொன்னதுக்காக எல்லாம் என்னை கழட்டி விடல. என்னை டைம் பாஸ்க்கு யூஸ் பண்ணி இருக்காள். ஆக்சுவலா அவள் முதல் முதல்ல என் கிட்ட பேச வந்த நாள் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அப்படியே பம்மி பம்மி பேசினாள். ராகிங்னு சொல்லி என் கிட்ட ப்ரபோஸ் பண்றதுக்கு ரோஸை நீட்டினாள்? ஆனா நான் தான் அவளை அவாய்ட் பண்ணிட்டேன். அவளைக் கண்டுக்கவே இல்லை. அதுக்கு தான் பழிவாங்குவதற்காக நல்லா பிளான் பண்ணி எக்ஸிக்யூட் பண்ணி இருக்காள். நானும் முட்டாள் மாதிரி அதை நம்பி இருக்கேன். என் பிரண்ட் அப்பவே சொன்னான். இந்த சேட்டுக்கார பொண்ணுங்கள நம்பாதடா. அவளுங்க கடைசில கழட்டி விட்டுட்டு தான் போவாளுங்கன்னு. என் பின்னாடி சுத்தின தமிழ் பொண்ணுங்க, மலையாள பொண்ணுங்க, ஆந்திரா பொண்ணுங்க எல்லாத்தையும் விட்டுட்டு. கடைசியில சேட்டு பொண்ணு கிட்ட போய் மாட்டினேன் பாரு. என் புத்தியைச் செருப்பால அடிக்கணும்” என்று அவன் ரைமிங்காக கூற.
அவளுக்கு சற்றென்று சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் தம்பிக்கு தெரிந்தால் வருத்தப்படுவான் என்று தனக்குள்ளாக அதை மறைத்துக் கொண்டாள்.