• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மறுத்தாலும் உன்னை மறப்பேனா - 9

ரோசி கஜன்

Administrator
Staff member

பிள்ளைகள் இருவரையும் உறங்க வைத்த தீர்த்தி பிரயு ஞாபகம் வர அவளிடம் பேச வெளியே வந்தாள். ஆனால் வாசலில் ருத்ரன் மட்டுமே நிற்க, அவனை கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல முற்பட்டாள். ஆனால் அவளின் கைகளை இறுக்கமாக பற்றி மேலே அவர்களின் அறைக்கு அவளை தரதரவென்று இழுத்துச் சென்றான் ருத்ரன்.

“என்ன பண்ற நீ என் கைய விடு” தீர்த்தி முரண்டு பிடித்துக் கொண்டு இருக்க அதனை கொஞ்சமும் காதில் வாங்காமல் உள்ளே இழுத்து சென்று கதவை அறைந்து சாற்றினான். கதவில் அவளை தள்ளி சாய்த்தவன் இரு பக்கமும் கைகளால் அணைகட்டி, கோபத்துடன் அவளை பார்க்க அவளோ அவனை எரிச்சலுடன் பார்த்தாள்.

“இப்ப எதுக்கு தேவையில்லாத வேலை பண்ணிட்டு இருக்க..” என அவள் கடுப்படிக்க ருத்ரன் இன்னும் அவள் கூறிய வார்த்தையில் கோபத்தில் இருந்தான். அது எப்படி தாம் அவளை பயன்படுத்திக் கொண்டோம் என கூறலாம் என்ற ஆதங்கம் அவனுள் அதிகமாய் இருந்தது.

“உன்னோட மனசுல இப்போ என்ன ஓடுதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. உன்னோட இந்த புத்தி அடுத்த பிளான் ஏதாவது பண்றதுக்கு முன்ன நூறு தடவை என்ன பத்தி யோசிச்சுக்க.. முன்ன இருந்த ருத்ரன் இப்போ இல்ல.. இந்த வீட்டை விட்டு நீ போகணும்னு நினைச்சா நீ மட்டும் தான் போக முடியும்.. இனிமேல் என் பசங்கள என்கிட்ட இருந்து பிரிக்க விடமாட்டேன் உனக்கு பசங்க கூட சேர்ந்து வாழணும்னா என் கூட இங்கேயே இரு இல்லையா நீ மட்டும் போ..” என்று கோபத்தில் கத்தினான்.

அவனுக்கு நிகராய் தீர்த்தி கத்தவில்லை மாறாக மிகவும் அமைதியாய் அவனை பார்த்தாள். அவனுக்கு மட்டும் தான் வார்த்தையால் கொல்லத் தெரியுமா என்ன?

“எங்க இருந்து இந்த அப்பன் பாசம் திடீர்னு உனக்கு பொத்துக்கிட்டு வந்துச்சு? காரணம் இல்லாம நீ யாரு பின்னாலையும் வர மாட்டியே.. சொல்லு.. என்ன வச்சு பிசினஸ்க்கு சாதகமா எவ்வளவு விஷயத்தை பண்ண இப்ப என் பசங்கள காரணம் காட்டி என்ன பண்ண போற? உனக்கு தான் மத்தவங்கள யூஸ் பண்றது ஒன்னும் புதுசு கிடையாதே.. உனக்கு சம்பந்தமே இல்லாத ஆளுங்க வாழ்க்கையில நுழஞ்சி அவங்கள கூட உனக்கு தகுந்த மாதிரி பயன்படுத்துகிற அளவுக்கு உனக்கு கேடுகெட்ட புத்தி இருக்கு இப்போ உன் சொந்த புள்ளைங்கள வச்சு என்ன பண்ண போற?

அஞ்சு வருஷமா நான் மறைச்சேன்னு சொல்றியே இப்ப மட்டும் நான் என்ன உனக்கு புள்ள பொறந்து இருக்கு அப்பனா வந்து பாத்துட்டு போன்னு வெத்தலை பாக்கு வச்சு அழைச்சேன்னா? சும்மா நடிக்காத உன் நடிப்பு எல்லாம் நம்பி ஏமாந்த பழைய தீர்த்தி எப்பவோ செத்துப்போயிட்டா.. அவளையும் நீதான் கொன்ன.. திரும்பவும் உன் நடிப்ப நம்பி ஏமாந்து போறதுக்கு நான் தயாராக இல்லை” விஷத்தை ஏற்றுவது போல் மெல்ல மெல்ல வார்த்தைகளால் அவனை நோகடித்தாள். நிதானமாய் இருந்தே வார்த்தையால் ஒருவனை சாகடிக்க முடியும் என நிரூபித்து விட்டாள்.

அவளின் வார்த்தைகள் அவனை பெரிதாய் தாக்கியது. அவளை அவன் ஏமாற்றியது இல்லை. அபாண்டமாய் அவள் பழியை சுமத்த அவனுக்கு அது பெரும் வலியை கொடுத்தது. அவன் பக்கம் இருக்கும் வலியையும் வேதனையையும் கேட்க அவள் கொஞ்சமும் தயாராக இல்லை. இப்பொழுது அவன் என்ன சொன்னாலும் அது அவளுக்கு நடிப்பது போன்று தான் தெரியும். அவள் மனதை நன்கு அறிந்திருந்தவன் அவள் போக்கிலே விட்டு பிடிப்போம் என இருந்தான்.

“தேவையில்லாம பேசுற வேலை வச்சுக்காத.. என் பிள்ளைகளை நான் எதுக்கு யூஸ் பண்ணனும் இதுவரை நான் யாரை யூஸ் பண்ணி கிழிச்சிட்டேனு என்னை பார்த்து இப்படி சொல்ற.. இளங்கோ கிட்ட நான் உன்ன யூஸ் பண்றேன்னு பேசுற என் கூட தான் அத்தனை மாசம் இருந்தியே அத்தனை வருஷமா என்ன காதலிச்சியே அப்ப எல்லாம் உனக்கு அது தோணலையா? ஒரு நிமிஷம் கூட என் லவ் உனக்கு உண்மையா தெரியலையா? என் கூட அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இன்னைக்கு இப்படி பேசிட்டு இருக்க.. எல்லாமே பொய்யின்னு உன்னால எப்படி டி சொல்ல முடியுது” என கேட்டவனின் குரல் கோபத்தில் கர்ஜித்தாலும் உள்ளுக்குள் வலி நிறைந்திருந்தது.

கண்களில் வெறுப்பு கொந்தளிக்க அவனை ஏறிட்டவள் விழிகள் கண்ணீர் துளியால் நிரம்பிருக்க, “பொய்யின்னு உனக்கு தெரியாதா? என்ன காதலிக்கிற மாதிரி நடிச்சு, உன்ன பார்ட்னரா நினைச்ச என் அண்ணனுக்கு துரோகம் பண்ணி, இன்னைக்கு ஒட்டுமொத்தமா எங்க வாழ்க்கையே நாசம் பண்ணி இருக்க.. என் அண்ணா சொன்னத நான் அன்னைக்கே கேட்டிருந்தா இன்னிக்கி இந்த நிலைமையில நான் இருந்திருக்க மாட்டேன்.. உன்னால என் வாழ்க்கையையும் எனக்குன்னு இருந்த எல்லா உறவையும் இழந்துட்டு தனியா நிக்கிறேன்.. உன்னோட பிசினஸ காப்பாத்திக்கிறதுக்காக என்ன காதலிக்கிற மாதிரி நடிச்சு ஏமாத்தி இருக்க நீ எல்லாம் மனுஷ பிறவியே கிடையாது” கத்தினாள் அவள்.

கண் முன்னே அவனின் காதல் வார்த்தைகள் எல்லாம் வந்து செல்ல துக்கம் தொண்டை அடைத்தது அவளுக்கு. அவன் முன்னே உடைந்த அழுக கூடாது என வீராப்போடு இருந்தாள் தீர்த்தி. அவளின் வேதனை அவனுக்கு புரிந்தாலும் அவளின் வார்த்தைகள் அவனை கொல்லாமல் கொன்றது. அவளுக்கு மட்டுமா அவள் காதல் ஓசத்தி? அவனுக்கும் தானே.. அவளைப் போல் அவன் வேதனையை சொல்ல நினைத்தால் பக்கம் பக்கமாய் அவனும் சொல்லுவான். ஆனால் பொறுமையாய் கேட்கும் எண்ணத்தில் தான் அவள் இல்லையே.

“இன்னொரு வாட்டி என் காதலை தப்பா பேசின நான் சும்மா இருக்க மாட்டேன் தீரா.. என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு தேவையில்லாம என்ன கோபப்படுத்தாத இப்போ என்ன எல்லா தப்பும் என்மேலன்னு சொல்ற அப்படித்தானே அப்படியே வச்சுக்கோ ஆனா ஒரு விஷயத்தை யோசிச்சு பாரு உன்னை ஏமாத்தனும் நினைச்சி இருந்தா இப்படி கல்யாணம் பண்ணி குழந்தையை கொடுத்து இருக்க மாட்டேன்.. கொஞ்சமாவது என் இடத்துல இருந்தும் யோசிச்சு பாரு.. என் காதல் பொய்யின்னு மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்றியே என்ன இத்தனை வருஷமா காதலிச்சல்ல அந்த காதலை கேட்டு பாரு உனக்கு அது பதில் தரும்.. இத்தனை வருஷம் உன்ன விட்டு விலகி இருந்தும் நீ இன்னும் அதை பத்தி யோசிக்கவே இல்ல உனக்கு உங்க அண்ணனுக்கும் பெருசா வித்தியாசமே இல்ல ரெண்டு பேருமே கொஞ்சம் கூட யோசிச்சு நடந்துக்கிறதே கிடையாது.. உங்களோட அவசர புத்தி தான் உங்க வாழ்க்கையே நாசம் பண்ணுது” என்று கூற தீர்த்திக்கு பயங்கர கோபம் வந்தது.

அவள் அண்ணன் பற்றி ருத்ரன் கூறவும் சட்டென்று அவன் கன்னத்தில் பலாரென ஒரு அறை விட்டிருந்தாள். அவள் அடித்ததற்கான காரணம் அவனுக்கு நன்றாய் தெரியும். அவனும் அவளின் அண்ணனை பற்றி பேசக்கூடாது என்று தான் நினைத்து இருந்தான். ஆனால் கோபத்தில் அவசரப்பட்டு வார்த்தையை விட்டு அடியையும் வாங்கிக் கொண்டான். அவள் அடித்த அடி வலித்ததா? நிச்சயம் இல்லை அவள் பேசிய வார்த்தைகளை விட இது ஒன்றும் அவ்வளவு பெரிய வலி அவனுக்கு கொடுக்கவில்லை.

அனல் தெறிக்கும் பார்வை பார்க்க அவளின் கண்களை ஏறிட்டு பார்க்க முடியாமல் தவிர்தான். ருத்ரன் சற்று விலகி செல்ல தீர்த்தி கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

“உனக்கு அவரை பத்தி பேச தகுதியே இல்ல பொறுக்கி..” என முணுமுணுக்க ருத்ரனுக்கு சுருக்கென்று கோபம் வந்தது.

பல்லை கடித்துக்கொண்டு அவளை பார்த்தவன், “ஆமாடி தகுதியே இல்லாத பொறுக்கி தான் இப்ப என்ன.. உன்கிட்ட அன்னைக்கு பொய் சொன்னேன் தான் இல்லன்னு சொல்லல… ஆனா என்னைக்காவது ஒரு நாள் நான் சொன்ன பொய் நிஜமாகி இருக்கும்.. அதேபோல உன் அண்ணன அந்தமான் உள்ள வர கூடாதுன்னு தான் நினைச்சேன்.. எனக்கும் அவனுக்கும் அந்த விஷயத்துல பிரச்சனை இருந்தது உண்மைதான்.. ஆனா உன் கழுத்துல இருக்கே இந்த தாலி இது உண்மை.. உன்னை ஏமாத்திட்டு போற அளவுக்கு பொறுக்கி நான் கிடையாது..

இனிமேல் இதுதான் உன்னோட வாழ்க்கை இத ஏத்துக்கிட்டாலும் இல்லனாலும் இதுதான் நிஜம்.. உனக்கு பிரிஞ்சு இருக்கணுமா தாராளமா கோர்ட்டுக்கு போ டிவோர்ஸ் கேளு நான் கொடுக்க ரெடியா இருக்கேன் ஆனா பசங்க என் கஸ்டடியில தான் இருப்பாங்க.. உன்னை எமோஷனல் பிளாக்மெயில் பண்றேன்னு நினைச்சாலும் சரி உன்னை இங்க வர வச்சு கொடுமை பண்றேன்னு நினைச்சாலும் சரி எனக்கு அதை பத்தி கவலையே இல்லை எனக்கு என் பசங்க வேணும் அவ்வளவுதான் உனக்கு உன்னோட பசங்க வேணும்னா உன்னால முடிஞ்சத பண்ணிக்க..” என அழுத்தம் திருத்தமாய் கூறினான் ருத்ரன்.

அதில் தீர்த்திக்கு மேலும் கோபம் அதிகரித்தது. ஏனென்றால் இங்கு இருந்து கொண்டு இந்த சூழ்நிலையில் அவளால் ஒன்றும் செய்ய முடியாது என அவனுக்கு நன்றாய் தெரியும். அந்த தைரியத்தில் தான் இப்படி பேசுகிறான் என கோபத்தில் கொதித்துக் கொண்டு இருந்தாள்.

“உன்ன மாதிரி ஒரு சுயநலமான பிறவியை நான் பார்த்ததே இல்ல உன்னோட தேவைக்கு மட்டும் உன் வாழ்க்கையில இருக்குற எல்லாரையும் யூஸ் பண்ணிக்குற.. ச்சீ.. உன்ன மாதிரியான ஒருத்தனை காதலிச்சேன்னு நினைக்கவே எனக்கு அசிங்கமா இருக்கு” என அவனை கோபப்படுத்துவதற்காக வார்த்தைகளை விட்டாள். அது அவள் நினைத்தது போலவே வேலை செய்தது.

தீர்த்தி முகத்தாடையை இறுக்கமாய் பற்றியவன், “ஆமா நான் ரொம்ப சுயநலமா யோசிப்பேன் தான்.. அதனால உன்னையும் இந்த இடத்தை விட்டு நான் போக விடமாட்டேன்.. சுயநலமா உன்ன என் கூட இந்த வீட்டிலேயே வச்சுப்பேன். எனக்கு தகுந்த மாதிரி மத்தவங்களை யூஸ் பண்ணிக்க தயங்க மாட்டேன். நீ இங்கே இருந்து போக நெனச்சா உன் பிரண்டுன்னு ஒருத்திய தூக்கிட்டு வந்து இருக்கேன்ல அவளையும் கொஞ்சம் நினைச்சு பார்த்துட்டு நீ முடிவு எடு..” என ஆத்திரத்தில் கூற தீர்த்தி கண்களை அகல விரித்தாள்.

அவனுக்குள் இருக்கும் மிருகத்தை எழுப்பி விட்டோம் என அவளுக்கு புரிந்தது. பிரயுக்தா உடன் இங்கிருந்து தப்பி செல்வது அவ்வளவு சுலபம் இல்லை என அவளுக்கு நன்றாக தெரியும். அதற்காக அவளை விட்டுவிட்டும் அவளால் செல்ல முடியாது. நிச்சயம் இந்நேரம் அவளை எங்கேனும் அடைத்து வைத்திருப்பான் என நினைத்தாள்.

“ருத்ரா உனக்கும் எனக்கும் பிரச்சனைனா நமக்குள்ள தான் அது இருக்கணும் தேவை இல்லாம எதுக்கு என் பிரண்ட இங்க வர வச்ச.. அவளை மட்டும் உன்னோட பகடைகாயா யூஸ் பண்ண நெனச்ச நான் மனுஷியாகவே இருக்க மாட்டேன்” என கோபத்தில் கூற அவள் கன்னத்தை பரிவாய் வருடியபடியே நக்கலாக சிரித்தான் ருத்ரன்.

தீர்த்தி சென்னையில் இருந்து கிளம்பிய மறு நொடியே அவனின் ஆட்களை விட்டு பிரயுக்த்தாவை அழைத்து வர செய்திருந்தான். காரணம் பிள்ளைகள் இருவரும் சிறிது நேரத்திலே தீர்த்தியை தேடுவார்கள் என நினைத்தவன் பிள்ளைகளுக்கு தெரிந்த ஒருவர் வேண்டுமென்பதற்காக பிரயுக்த்தாவையும் அழைத்து வர சொல்லிவிட்டான். அதனால் தான் அருளும் சூர்யாவும் இவ்வளவு நேரம் பயமில்லாமல் இருந்தார்கள்.

அவன் சிரிப்பதை கண்டு தீர்த்தி குழப்பமாக முகத்தை சுருக்கிட, “என்ன பத்தி தான் உனக்கு நல்லாவே தெரியுமே தீரா எத பண்ணாதன்னு சொல்றியோ அதை தானே நானும் பண்ணுவேன்” என நக்கலாய் பேச தீர்த்திக்கு இன்னும் கோபம் அதிகரித்தது. அவன் முன்னே நிராயுதபாணியாய் இருப்பது போல் உணர்ந்தாள். இவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஏதேனும் பணயம் வைத்து தான் தப்பிக்க முடியும் என உணர்ந்தவளுக்கு பணயம் வைப்பதற்கு எதுவும் சிக்கவில்லை.

“ரொம்ப யோசிக்காத தீரா என்ன கோபப்படுத்தாம சமத்தா நம்ம பசங்களோட இருந்தா உன் பிரண்டுக்கு ஒன்னும் ஆகாது உனக்கும் எதுவும் ஆகாது.. முன்னாடிதான் இந்த தாலியோட மதிப்ப கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம விட்டு எறிஞ்சுட்டு போன இனிமேலாவது அதுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து நடந்துக்கோ..

அப்புறம் இன்னைக்கு நமக்கு திரும்பவும் கல்யாணம் ஆகி இருக்கு அதனால திரும்பவும் ஃபர்ஸ்ட் நைட்டு கொண்டாடுறதுல எனக்கு பிரச்சனை இல்ல ஆனா நீ மூடுல இல்லையே அதனால இன்னைக்கு விட்டுடறேன்.. நாளைக்கு இதே போல நல்ல பையனா இருப்பேனானு தெரியல.. உன்ன பக்கத்துல வச்சுட்டு என்னால சும்மா இருக்க முடியுமா என்ன? அதனால சும்மா முறைச்சு முறைச்சு எனக்கு மூடு ஏத்தாம இருந்துக்கோ” என நக்கலாக பேசி அவளை மேலும் வெறுப்பேற்றினான் ருத்ரன். அவள் வார்த்தையால் நோகடித்ததற்கும் இவன் அவளை இப்படி வெறுப்பேற்றியதற்கும் சமமாகியது என்பது போல் உணர்ந்தான்.

அவள் முறைத்துக் கொண்டே இருக்க அவள் நுனி மூக்கில் மெலிதான முத்தம் ஒன்றை பதித்து விட்டு அறையை விட்டு வெளியேறினான். அவன் சென்ற பின்பும் அவளுக்கு கோவம் கொஞ்சமும் குறையவில்லை.

மூச்சு வாங்க எரிச்சலும் கோபமும் கலந்த உணர்வோடு மெத்தையில் சென்று அமர்ந்தாள். ருத்ரன் கழுத்தை நெறிக்க வேண்டும் என்பதுபோல் இருந்தது அவளுக்கு.

வெளியே வந்த ருத்ரன் முகம் பாறை போல் இறுகியது. என்னதான் அவளை வெறுப்பேற்றி விட்டு வந்தாலும் அவளின் வார்த்தைகள் இன்னும் அவனை குத்தி கொன்று கொண்டு தான் இருந்தது. காதல், கல்யாணம், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை என அனைத்தையுமே கால் தூசியை விட கேவலமாய் அவள் நினைப்பது அவனுக்கு பெரும் வலியை தந்தது.

இறுகிய முகத்துடன் அவன் இறங்கி வர இளங்கோ அந்த நேரம் தான் வீட்டின் உள்ளே நுழைந்தான்.

“அண்ணா அந்த பொண்ண நீங்க சொன்ன மாதிரி கெஸ்ட் ஹவுஸ்ல பத்திரமா தங்க வச்சுட்டேன்..” என்று கூற, யோசனையுடனே சோபாவில் அமர்ந்தான் ருத்ரன்.

“அந்த பொண்ணு என்ன கேட்டாலும் பண்ணி கொடு. இவளை சமாளிக்க அந்த பொண்ண பத்திரமா வச்சுக்கணும்.. அதேபோல கொஞ்ச நாளைக்கு நம்ம பசங்கள அந்த கெஸ்ட் ஹவுஸ் பக்கம் போக சொல்லாத அந்த பொண்ணுக்கு தேவையில்லாத பயத்தை கொடுக்கும்” என கூற இளங்கோ சம்மதமாய் தலை அசைத்தான்.

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன் அண்ணி கிட்ட ஏதாவது பேசினீங்களா அண்ணி இன்னும் மாறாம அப்படியே தான் இருக்காங்க”

“அவள் இப்போதைக்கு திருந்த மாட்டா..” என பெருமூச்சுடன் கூறியவன் விழிகள் சிறுவர்கள் உறங்கும் அறை மீது பட்டது. “பசங்க இந்நேரம் தூங்கி இருப்பாங்க இல்ல” என்று கூறியபடியே எழுந்து அவர்கள் அறை உள்ளே சென்றான்.

உள்ளே சென்றால் அருளை கட்டிப்பிடித்துக் கொண்டு சூர்யா உறங்கிக் கொண்டு இருக்க ருத்ரன் இதழில் மெலிதான புன்னகை படர்ந்தது.

“பசங்க ரெண்டு பேருமே உங்கள மாதிரி தான் இருக்காங்க” என சிறுவர்களை ரசித்தப்படியே இளங்கோ கூற ருத்ரன் அர்த்தமாய் புன்னகைத்தான். “அப்போ இத்தனை வருஷமா இவங்க ரூபத்துல என்ன பார்த்துட்டு தான் இருந்திருக்கா” என அவன் நினைக்கவே அவனுக்கு ஆனந்தமாய் இருந்தது.

மறுபுறம் கெஸ்ட் ஹவுஸில் இருந்த பிரயுக்தா அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையில் யோசனையுடன் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தாள். இங்கு வந்ததிலிருந்து அவளும் ருத்ரனை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். அதனால் இப்பொழுது தீர்த்தி மனதில் என்ன இருக்கும் என்ற குழப்பம் அவளுக்கு பெரிதாய் இருந்தது.
 
Top Bottom