“ப்ளீஸ் மா…குட்டி!” “இங்க பாருங்க, இப்ப நீங்க ஏன் எனக்குப் ப்ளீஸ் போடுறீங்க? நீங்க உங்களுக்கு எது சரி எண்டு படுதோ அதைத் தாராளாமாச் செய்யுங்க. உதயா இங்க வரவே வேணாம். அவள் சரி நல்லா இருக்கட்டும். ...
“அண்ணா வாறீங்களா போயிட்டு வரலாம்; வருவம் எண்டு பார்த்துக் கொண்டிருப்பீனம்?” என்ற குட்டியின் குரலில் சலிப்பு அப்படியே ஒட்டிக் கிடந்தது. இத்தோடு எத்தனையோ தடவைகள் அழைத்து விட்டாளே! இருந்தும் நான் அச...
“உங்களுக்கு இப்ப டியூஷன் இருக்குது தானே? இதில உங்களுக்கு கதைக்கிறதுக்கு ஒண்டும் இல்ல! ரெண்டு பேரும் வாயை மூடிக்கொண்டு போயிருங்க!” சித்தியின் அதட்டலைக் கேட்டுக்கொண்டு, “உதயா!” என்றபடி உள்ளே வந்து...
அப்படி எனக்குக் கெட்டது நினையாதவர்தான் குடியோடு உறவாடிக் கிடந்த தன்ர மகனை, அதுவும், வீட்டில் காதலியின் புகைப்படங்களை மாட்டிவைத்து, அதைப் பார்த்து நாட்களைக் கழிக்கிறவரை எனக்குக் கல்யாணம் செய்து வைத...
அவரோ, கவியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாது என்னையே பார்த்துக் கொண்டு நின்றார். ‘பள்ளிக்கூட வாசலில வச்சு என்ன இதெல்லாம்?’ எனக்கும் மிகுந்த சங்கடமாகவே இருந்தது. எரிச்சலாகவும். ‘வேணாம் எண்டால் வி...
அப்படி அவர்கள் கதைக்கையில், சின்னதாகக் கூட நான் கலங்கிடக் கூடாது. பரிதாபம் என்றது யார் முகத்திலும் வரும் வகையில் நடக்கக் கூடாது எனும் வைராக்கியம் மனதுள் வலுப்பெற, சாந்தியை ஏறிட்டேன். “அது ஒன...
எனக்குத் திருமணம் என்றுதானே பாடசாலையில் விடுமுறை எடுத்திருந்தேன். அந்தநேரமே, “கலியாணத்துக்கு எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டிரோ?” என்று கேட்ட சக ஆசிரியர்களுக்கு அழகான புன்னகையோடு, “பெரிசா எல்லாம் செய்...
உண்மை சுட்டதில் உதயாவுக்கு நான் இழைத்த அநீதி மேலும் பெரிதாகவே தெரிந்து தொலைத்தது. முணுமுணுத்தபடி வந்த தங்கையையும் அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி வருகையில் இருவருமே எதுவும் கதைத்துக் கொள்ளவில்லை. ...
முதல் நாளிரவு நீண்ட நேரமாக எனக்கும் தங்கச்சிக்கும் இடையில் வாக்குவாதம் நடந்திருந்தது. “எல்லாவற்றையும் விடுங்க அண்ணா. உங்கட கண்ணுக்கு முன்னால நடமாடுற அம்மாவைப் பாருங்கவன். எந்தநேரமும் கோபமும் புலம்...
கோபத்தோடு சொன்னபடி கரம் பற்றி இழுத்த கவியைச் சீறலோடு அடிக்க ஓங்கிக் கொண்டு வந்தார் சித்தி. அதன் பிறகும் வாயை மூடிக்கொண்டு நின்றால் மீண்டும் நானே பிழை செய்தவளாகிவிடுவேன் தானே? “கவி, தீபி&#...
