அந்த கார் பார்க்கிங்கில் சற்றே தள்ளி நின்றவர்களில் ஒரு யுவதிதான் முதலில் கண்டது. அவள் மட்டும் கூச்சலிடவில்லையோ பலமான காயங்களுக்கு உட்பட்டிருப்பார்கள். முதலில் சுதாரித்த வேர்த் மின்னலாய் மனைவியை இழுத்த...
நெருப்பென்றால் வாய் வெந்துவிடப்போவதில்லை. சரி, பிடிக்கவில்லை என்றே வைப்போமே. இருந்தாலும் உன்னை நேசிக்கிறேன் என்று மனம் திறந்தவன் அவளுள் சிறிதேனும் பாதிப்பை ஏற்படுத்தவில்லையா? அவள் இதயம் தாளநயம் தப்பி...
‘அந்த வெள்ளைப் பன்றி வந்தா ..சே சே வர மாட்டான். சரி வந்தாலும் எனக்கென்ன, இளிச்சுக்கொண்டு கிட்ட வந்தா காலில இருக்கிறதால குடுக்க வேண்டியதுதான்’’ என்று எண்ணியபடி, மனக்கொதிப்பு அடங்காதுதான் விமான நிலையத்...
அவன் முகம் பார்த்து, அந்த விழிகளின் கூர்மையை, அது உணர்த்தும் நேசத்தை ஒன்றுமேயில்லை என்று கடந்தபடி, தான் நினைத்ததை அவனோடு கதைக்க இயலவில்லை. பார்வை நேரே முன்னால் பாதையில் இருக்கவே தொடர்ந்ததாள். “உங்கட ...
கார் சீரான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. மாறாக அதனுள் அமர்ந்திருந்த இருவர் மனங்களும் சீராகச் சிந்திக்க இயலாத தடுமாற்றத்தின், தவிப்பின், கோபத்தின், எரிச்சலின் பிடியில் அகப்பட்டுப்போயிருந்தன. ஒன்றா இர...
பெரியவரின் முகச் சுளிப்பைப் பார்த்துக்கொண்டே அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டான், ஏதன். “ப்ளீஸ் விடு!” விலக முயன்றவளுக்கு இப்போது விழிகள் கலங்கிவிட்டிருந்தன. அவன் தோள் வரைதான் உயரம் இவள். அவன் முகம் பார்...
அவர் சொன்ன விதத்தில், பார்த்த சீண்டலான பார்வையில் விழி சுருங்கக் கண்ணடித்ததில் தடுமாறிப்போனது துர்காதான். கோபமும் எரிச்சலுமாக ஏதனோடு சீறியவள், அப்பெரியவர் ஆரோன் அன்னையென்று தெரிந்தபின் தன்னைக் கட்டுப...
வேகமாக வந்த அம்மாது பட்டென்று ஏதன் முதுகில் ஒரு போடு போட்டார். “நோஓஓ … கிராணி!” ஏதன் உரிமையோடு கத்தினான். துர்காவைப் பிடித்த பிடியை மட்டும் விட்டுவிடவில்லை. முதியவர் பார்வை ஏதனை முறைத்தது. அதே வேகத்...
தன்னில்தான் கொண்ட கோபம் அப்படியே அவனில் பாய்ந்தது. அப்படி என்ன செய்து விடுவானாம் என்ற அசட்டுத் துணிச்சலும் ஆரோன் என்ற மனிதர் மறைமுகமாகக் கொடுத்த தைரியமுமாக அவனை முறைப்போடு பார்த்தவள் ஒரே இலுவையில் கை...
அவள் நண்பி மட்டுமல்லாது போவோர் வருவோர் பார்வையும் அவர்களில்தான். அதுவும் ஏதனை அடையாளம் கண்டவர்கள் தம்முள் குசுகுசுத்துக்கொண்டே கைப்பேசியை அவர்கள் நோக்கிப் பிடித்தார்கள். ஒரே உதறலில் விடுபட்டவள் மறு ந...
